அதிர்ச்சியும் துக்கமும் வரவழைத்த செய்தி

Spread the love

சத்யபாமா  ராஜகோபாலன்

appa_and_venkatஅதிர்ச்சியும் துக்கமும் வரவழைத்த செய்தி…..

கலைத்தாயின் புதல்வன் கலைத்தாயின் தினத்தன்று அவள் திருவடிகளை அடைந்துள்ளார்.

தமிழ் எழுத்துலகிற்குப் பெரும் நஷ்டம்….

மலர் மன்னனும் அவரும் எழுதும் கட்டுரைகளை ஒருவருக்கொருவர் படித்து தங்கள கருத்துக்களை பரிமாறிக்கொள்வர்…..

கடைசியாக அவர் சென்னை வந்தபோது பார்க்க முடியவில்லை என்னால்…. இன்னன்பூரான் சௌந்தர் ராஜன் ஐயா சொன்னார். ஸ்வாமிநாதன் பெசண்ட் நகரில் இரு தினங்கள் முன் நான் சந்தித்தேன் நீயும் போய் பார்மா என்று கூறினார்.என் உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் போய் சந்திக்கவில்லை.இப்பொழுது மனம் மிகவும் வேதனை அடைகிறது ஸ்வாமிநாதன் ஐயாவை சென்று சந்தித்திருக்கலாமே என்று. இவரை அறிந்ததும் இவரை சந்தித்ததும் நான் செய்த பாக்யம். தி.ஜ.ர.வின் நட்பு பற்றி என்னிடம் பேசியுள்ளார்.தி.ஜ.ர.வின் ஆசியும், மலர் மன்னன் ஐயாவின் ஆசியும் தான் நான் இவரை சந்தித்து ஆசிபெற்றேன்.

எனது ஆழ்ந்த மன வருத்தங்கள்.

தி.ஜ.ர. குடும்பம் மிகவும் வறுமை வாடுகிறது என்பதை அறிந்த உடன் முதலில் உதவி செய்த எழுத்துலக நக்ஷ்த்திரம் திரு வெ.சா.ஐயா தான் . திண்ணையிலும் எழுதி உதவி பெற்றுத்தந்தவர் திரு வெ.சா ஐயா. என் உயிருள்ள வரை அவரை மறக்க மாட்டேன். அவர் இப்பூலகில் அவரது பூத உடலை விட்டுச் சென்றாலும் எழுத்துல வானில் ஒளிரும் நக்ஷத்திரமாகவேத் திகழ்வார் என்பதில் எந்த ஐயமும் இல்லை….

மதிப்பிற்குரிய வெங்கட் ஸ்வாமிநாதன் அவர்களின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களும்…..பிராத்தனைகளும்…..

 

Series Navigationஅதங்கோடு அனிஷ்குமார் கவிதைகள்அ. ரோஸ்லின் கவிதைகள் — ஒரு பார்வை