கவிதை

Spread the love

குப்பைகளைக்

கிளறினால் துர்நாற்றம்

எரித்தால் மின்சாரம்

 

காணும் காட்சியில்

கண்கள் மேய்கிறது

 

ஆனால் மனம்?

அறுத்துக்கொண்டு

திரிகிறது

 

நேற்று நடந்த

ஓர் அவமானத்தை

ஓர் இழப்பை

ஒரு துரோகத்தை

கிளறிக் கிளறித்

துடிக்கிறது

 

கிளறினால் துர்நாற்றம்

எரித்தால் மின்சாரம்

 

எப்படி எரிப்பது?

 

இதோ

மனோவியல் ஞானி ஜேகேயின்

ஜெயிக்கும் வார்த்தைகள்

 

காணும் பொருளாக

காண்பவன் மாறிவிட்டால்

கிளறும் வேலையை

மறக்கும் மனம்

பின் ஜெயிப்பது நிஜம்

 

புரிவது அரிது

புரிந்தால் பெரிது

 

முயற்சிப்போமே

2014ல்

 

 

 

Series Navigationஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் -1மிகைக்கேடயச் சுரப்பி நோய் -Hyperthyroidismஜாக்கி சான் 23. படங்களுக்கு மேல் படங்கள்அருளிச் செயல்களில் மாயமானும் பறவையரசனும்ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-16 சஞ்சயன் தூதுஅகரம் கலை- இலக்கிய- ஊடக நிலையம் நடத்தும் பாடலாசிரியருக்கான பயிற்சிப் பட்டறை கொழும்பில்.வால்ட் விட்மன் வசனக் கவிதை – 56 ஆதாமின் பிள்ளைகள் – 3முன்னுரையாக சில வார்த்தைகள் மறுபடியும்வசுந்தரா..திண்ணையின் இலக்கியத் தடம் -16திண்ணையின் எழுத்துருக்கள்அதிகாரத்தின் துர்வாசனை.அதிர வைக்கும் காணொளிவிறலி விடு தூது நூல்கள் புலப்படுத்தும் உண்மைகள்பரிதி மண்டலத்தின் அண்டக்கோள் நகர்ச்சி விதிகளைக் கணித்த ஜொஹானஸ் கெப்ளர்இவரைப் பார்த்தா இரக்கப்பட்டேன்?புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ – 40ஒன்றுகூடல்கேட்ட மற்ற கேள்விகள்தாகூரின் கீதப் பாமாலை – 96 யாசகப் பிச்சை .. !