அமீதாம்மாள் மகள் வீட்டில் எல்லாருக்கும் கொரொனா விமானத்தைத் தவறவிட்டு தவிக்கிறான் மகன் தைவானில் மனைவி தாலிக்கொடியில் தாயத்தைக் காணோம் இலக்கியப் பரிசுக்கு என் நூல் தேர்வு இணையத் திருட்டில் என் இரண்டாயிரம் காணோம் பள்ளியில் விபத்தாம் மருத்துவமனையில் பேத்தி நன்கொடைக்கான என்நூல் வெளியீட்டில் பத்தாயிரம் திரண்டது மாத்திரை போதாதாம் சர்க்கரைக்கு இனி இன்சுலினாம் கிழிபட்டு கிழிபட்டு தைக்கப்படுகிறது வாழ்க்கை வாசலில் நித்தியகல்யாணி எல்லாநாளுமே புதுப்புதுப் பூக்களால் சிரிக்கிறது
பின்னூட்டங்கள்