அனைத்துலக பெண்கள் தின விழா

Spread the love

அன்புடையீர் வணக்கம்.

எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தினால் நடத்தப்படவிருக்கும் அனைத்துலக பெண்கள் தின விழா தொடர்பான செய்தியை  இத்துடன் இணைத்துள்ளோம். இதனை தங்கள் இதழில் இணைத்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் மிக்க நன்றி.

அன்புடன்

லெ.முருகபூபதி

(துணைத்தலைவர்)

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம்.

மெல்பனில் அனைத்துலக பெண்கள் தின விழா

மறைந்த பெண்ணிய ஆளுமைகள் அருண்.விஜயராணி – தமிழினி நினைவுரை

அனைத்துலகப் பெண்கள் தினத்தை முன்னிட்டு அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியக் கலைச்சங்கம் எதிர்வரும் மார்ச் 06 ஆம் தேதி     (06-03-2016) ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்கு மெல்பேர்ண் பிரஸ்டன் நகர மண்டபத்தில் (Preston City Hall, Gower Street, Preston 3072) விழா ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியக் கலைச்சங்கம் முதல் முறையாக நடத்தவிருக்கும் அனைத்துலகப் பெண்கள் தின விழாவில் கருத்தரங்கு – கவியரங்கு – விவாத அரங்கு – நினைவரங்கு மற்றும், பெண்ணியச் சிந்தனையைத் தூண்டக்கூடிய வகையிலமைந்த “அசோகவனத்தில் கண்ணகி” என்ற நாடகமும் – அண்மையில் மறைந்த பெண்ணிய ஆளுமைகளான படைப்பாளிகள் அருண் விஜயராணி, தமிழினி சிவகாமி ஆகியோரின் ஞாபகார்த்த நினைவுரையும் இடம்பெறவுள்ளது.

—0—

 

 

3 Attachments

Preview attachment Thamizini_Sivakamy.jpg

Preview attachment அருண்__விஜயராணி.gif

Series Navigationநேர்ப்பக்கம் – அழகியசிங்கரின் கட்டுரைத்தொகுதிஹாங்காங் தமிழ் மலரின் பிப்ரவரி 2016 மாத இதழ்