அன்பின் அரவம்


குமரி எஸ். நீலகண்டன்

 

யாரோ ஒருவருடன்

சதா பேசிக் கொண்டே

இருக்கிறார்கள்.

சுற்றி யாருமில்லை.

அலைபேசியில்தான்

பேசிக் கொண்டே

இருக்கிறார்கள்.

 

அல்லது யாரோ

ஒருவருடன்

பேசிக் கொண்டே

இருக்கிறார்கள்.

உற்று நோக்கி

ஒருமித்தப் பார்வையுடன்

பேசிக் கொண்டே

இருக்கிறார்கள்.

சுற்றி யாருமில்லை.

அலைபேசியுமில்லை.

 

குமரி எஸ். நீலகண்டன்

Series Navigationகாதல் கொடைசுனாமியில்…