Articles Posted by the Author:

 • சத்தியத்தின் நிறம்

      குமரி எஸ். நீலகண்டன் எரி தணலில் எஞ்சிய கரியை கரைத்தேன் கரைத்தேன் சுவரில் காந்தியை வரைந்து…. உண்மை மக்களின் பார்வையில் உறையட்டும் என்று..   காந்தி சிகப்பாக தெரிந்தார் தணல் இன்னமும் கரியில் கனன்று கொண்டே இருந்தது.   குமரி எஸ். நீலகண்டன் punarthan@gmail.com    


 • குறளின் குரலாக சிவகுமார்

  குமரி எஸ். நீலகண்டன் 75 வது சுதந்திரத் திருநாளின் முந்தைய நாள் ஈரோடு புத்தக கண்காட்சியில் சிவகுமார் அவர்களின் திருக்குறள் 100 உரை கேட்டேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னரே வள்ளுவரே உலகின் மூத்த மொழியான தமிழ்வழி உலகம் உய்வதற்கு உன்னதமான அறக் கருத்துக்களை ஈரடி குறளில் இனிமையாக தந்து விட்டார். அதன் பின் தலைமுறை தலைமுறையாக அந்தக் குறளை மக்களிடம் சேர்க்க அறிஞர்கள் பலரும் வெவ்வேறு உத்திகளைக் கையாண்டு வந்திருக்கிறார்கள். அந்தந்தக் காலத்து மொழி நடையில் பல்வேறு […]


 • ஒளி மூலம்

  ஒளி மூலம்

      குமரி எஸ். நீலகண்டன்   அண்ட வெளியில் கோடிக் கணக்கான மைல்களையும் கோள்களையும் கடந்து விண்கற்களிலும் தூசுத் துகள்களிலும் சிந்தியும் சிதறியும் சிதையாமல் வந்த ஒளி மெல்லிய இமைகளின் மூடலில் ஊமையாகிப் போனது.                                                punarthan@gmail.com    


 • எறும்பின் சுவை

  எறும்பின் சுவை

      குமரி எஸ். நீலகண்டன்   முறுக்கான கணுக்களாலும் மூர்க்கமான திடத்துடன் நெடு நெடுவாய் நிற்கிறது கரும்பு.   ஊதா வண்ணத்துள் ஒடுங்கி இருக்கிறது கோடி கோடி எறும்புகளுக்கும் அள்ளிக் கொடுக்க அளவில்லா சர்க்கரை.   பூச்சில் தெரிவதில்லை புதைந்திருக்கும் இனிப்பு.   கரும்பு மரத்தடியில் காட்டெறும்பு குடிக்கிறது ஓடிய ரயிலின் சன்னலிலிருந்து விழுந்த கார்பரேட் பொட்டலத்தில் ஒட்டிய குளிர் பானத்தின் துளிகளை சுவை சொட்ட சொட்ட.           punarthan@gmail.com


 • நிழல் பற்றிய சில குறிப்புகள்

  நிழல் பற்றிய சில குறிப்புகள்

        குமரி எஸ். நீலகண்டன்   நிழல்களின் யுத்தம் நேரிட்டப் பாதையில்… எங்கோ புயலின் மையம்…   இருட்டில் நிழல்கள் ஒன்றிணைந்தன. வெளிச்சங்கள் கொஞ்சம் விழித்த போது விழுந்த இடமெல்லாம் நிழல்களால் நீடித்தது நித்தமும் போர்.   பணிவாய் நடக்கிற போது முந்துவதும் நிமிர்ந்து ஒளிப்பந்தை வீரமாய் பார்த்தால் பின்னால் பதுங்குவதும் நிழலின் இயல்பு.   நிழல்கள் விழுந்தும் காயப்படுவதில்லை. மிதி பட்டும் வலிப்பதில்லை.   punarthan@gmail.com  


 • சிவகுமார் என்ற ஓவியத்திற்கு வயது 80

                                               குமரி எஸ். நீலகண்டன்                                                                 சிவகுமார் ஒரு பிறவிக் கலைஞர். கலைஞர்கள் எப்போதுமே படைக்கப் படுகிறார்கள். அவர்களின் சூழலையும் அதனுள் இயங்குகிற அவர்களின் சுய உந்துதலையும் பொறுத்து கலைஞன் மாபெரும் கலைஞனாக உருவெடுக்கிறான். பழனிமலை உச்சியில் ஒலித்த அப்பாவின் உரத்த திருப்புகழும் அம்மாவின் உறுதியான கடுமையான உழைப்பும் காசி கவுண்டன்புதூரில் ஒரு கலைஞனை விளைவித்தது.  பருத்திக் காட்டில் அவள் பாசனம் செய்த வியர்வையும் அந்த வளமான மண்ணின் ஈரமும் வாசமும்தான் […]


 • நடிகர் சிவகுமாரின் கொங்கு தேன் – ஒரு பார்வை

    குமரி எஸ். நீலகண்டன்   சிவகுமாரின் கொங்குதேன் நூல் கொங்கு மண்ணின் வரலாற்றை வாசத்துடன் பதிவு செய்திருக்கும் ஒரு உன்னதமான நூல். கிராவின் எழுத்துக்கள் போல் உயிர்ப்புடன் அந்த கிராமத்தை நம்மோடு ஈர்த்து வைக்கிறது சிவகுமாரின் எழுத்து. இந்து தமிழ் திசை இணையதளத்தில் தொடராக வந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். கொங்கு தேன் நூலில் பிளேக் பற்றிய செய்தியைப் படிக்கும் போது இன்றைய கொரோனாதான் நம் மனதில் நினைவுகளை விரிக்கிறது. அன்றைய பிளேக் சிவகுமாரின் 12 […]


 • ப. திருமலையின் கொரோனா உலகம் – ஒரு பார்வை

  குமரி எஸ். நீலகண்டன் நான் பலதடவை ஒரு வித்தியாசமான வகையில் பெருமைப்படுவது உண்டு. காந்தி என்ற பெயரை உலகின் ஏதாவது ஒரு மூலையில் யாராவது ஒருவர் இந்த நொடியில் நிச்சயமாக சொல்லிக் கொண்டுதான் இருப்பார். பாரதியார், வள்ளுவர், கம்பரென தமிழுக்கு பெருமை சேர்க்கிற உலகம் வியக்கும் ஆளுமைகளையும் உலகில் ஏதாவது ஒரு மூலையில் யாராவது ஒருவராவது இந்த நொடியில் பேசிக் கொண்டோ எழுதிக் கொண்டோ இருப்பர். காற்று போல உலகில் பரவி புகழுடன் வியாபித்து நிற்பவர்கள் இந்த […]


 • காந்தியின் கடைசி நிழல்

      மலையாளத்தில் மூலம் – எம்.என். காரசேரி, தமிழில் – குமரி எஸ். நீலகண்டன் எம்.என். காரசேரி மலையாளத்தில் மிகவும் அறியப்பட்ட முக்கியமான எழுத்தாளர். அவர் சமீபத்தில் மறைந்த காந்தியின் தனிச் செயலாளர் கல்யாணம் அவர்களோடு மிகுந்த நட்பும் அன்பும் கொண்டிருந்தார். அவர் மலையாளத்தில் எழுதிய அஞ்சலிக் கட்டுரையின் தமிழ் வடிவம் இது. ”சுடப்பட்டு ரத்தம் சிந்த காந்திஜி பின்னோக்கி விழுந்தார். அவரது கண்ணாடியும் காலணிகளும் தூக்கி எறியப்பட்டன. எதுவும் பேச இயலாமல் திகைப்பில் நின்றேன் […]