அம்மாவும் பூனக்குட்டியின் கனவுகளும்

அம்மா வளர்த்த பூனையும்
குட்டி ஈன்றது
கருப்பும் வெள்ளையும் கலந்த நிறத்தில்
காந்தக் கண்களோடு பளிச்சென்று ஓரே குட்டி

பிறிதொரு நாளில்…
பாட்டி அனுப்பிய பட்சணங்களோடு
என்னருகில் அமர்ந்திருந்தாள்
வாஞ்சையோடு தலை கோதியபடி அம்மா

விண்ட பட்சணத்தை என் வாய் திணிக்கையில்
’மியாவ்’ என்றதும்
தரையில் எறிந்த துண்டத்தை முகர்ந்து
மேசையினடியில் உறங்கிய
தாய் மடி பற்றி எம்பிப் பார்த்ததும்
சாட்சாத்
அம்மாவின் பூனைகுட்டியே

பூனையின் கனவுகளும்
நமக்கானதே!

-தம்பி பிர்தோஸ்

Series Navigationஅட்டாவதானிகிறிஸ்துமஸ் பரிசு!