அலையும் வெய்யில்:-

பார்க் பெஞ்சுகளில்
சூடு ஏறி அமர்ந்திருந்தது.
மரங்கள் அயர்ந்து
அசைவற்று நின்றிருந்தன.
ஒற்றைப்படையாய்ப்
பூக்கள் பூத்திருந்தன.
கொரியன் புல் துண்டுகள்
பதிக்கப்பட்டுக் கொண்டிருந்தன.
டெரகோட்டா குதிரை
சாயம் தெறிக்கப் பாய்ந்தது.
இலக்கற்ற பட்டாம்பூச்சி
செடிசெடியாய்ப் பறந்தது.
குழாய்களில் வழிந்த நீரை
சூரியன் உறிஞ்சியபடி இருந்தது.
உஷ்ணம் தகிக்க நிழல்களும்
ஓடத் துவங்கி இருந்தன.
காவலாளியும் பூட்டுவாருமற்று
விரியத் திறந்திருந்தது கதவு
உடைதட்டி எழுந்த அவள்
ஒரு முத்தத்தை நிராகரித்திருந்தாள்

Series Navigationஏழ்மைக் காப்பணிச் சேவகி(Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 4ஒன்றுமறியாத பூனைக்குட்டி..:-