அழகிய புதிர்

Spread the love

 

 

சத்யானந்தன்

 

மரத்தின்

இலைகிளையின் அடர்ந்த

பெரும் தோற்றமாய்

 

வெள்ளைப் படுதா மேல்

வீச்சுடன் விழுந்த

கருப்பு மையாய்

 

அரிதாய்க் காணும்

யானையின் சயனமாய்

 

வெண்பஞ்சுச் சிதில்

விஸ்வரூபமானதுவாய்

 

கடலலையின்

நுரை வடிவாய்

 

மேகங்கள்

 

அலையும் அடிக்கடி

வடிவம் மாறும்

வானின் மன அலைகள்

 

என் கற்பனை

விரிய விரிய வெவ்வேறாய்த்

தெரியும்

அழகு

 

அலைகள் மேகங்கள்

மின்னல்கள்

அரங்கேறும் பெண் முகம்

சுட்டும் அகம்

கற்பனைக் கெட்டாத

அழகிய புதிர்

Series Navigationகூடுடல்லாஸ் நகரில் நடந்த தமிழிசை விழா 2015