அழியா ரேகை

Spread the love

இரா.ஜெயானந்தன்.

அழிந்த நினைவுகளில்,
யாரோவின் வாழ்க்கை சட்டங்கள்
தொங்கி கிடக்கும்
மேலான கீழான காலடிச் சுவடுகள்
எழுத முடியாத சுயசரிதை.

ஒரு சிலர் கவனமாக
தூக்கி செல்வர் வாழ்க்கையை!
பலரின் சிலரோ தீர்க்க முடியாத
வாழ்வின் சுமைகள்
தெருவோர மரநிழலில் ஊசலாடும்!

திறந்துதான் கிடக்கும் கதவுகள்
வழி தெரியாமல் போன
ஆத்மாக்கள் அலைந்தோடும்
சவக்குழியில் !
நெஞ்சின் நினைவுகள்
வேகும் முன்னே
காரியதாரிசி கணக்குப்பார்பான்
வெட்டியான் அடுத்தகுழி தோண்டுவான்.

இரா.ஜெயானந்தன்

Series Navigationதாத்தா வீடுகோவை இலக்கிய சந்திப்பு 73 (27.11.16)