அழையா விருந்தாளிகள்

Spread the love

எனது தனிமையின் மௌனம்
தற்போது வருகை பு¡¢ந்த உங்களை
வெறுப்புக்குள்ளாக்கியிருக்கலாம்
வயிற்கதவை தட்டிக்கொண்டிருக்கும்
உங்களின் கோபத்தையும்
பொருட்படுத்த முடியாமலிருக்கிறேன்
வீடு தேடி வந்தும் என் பாராமுகத்தால்
அவமானப்படுத்தப்படுகிறீர்கள்
என்பதையும் நான் கவனிக்காமல் இல்லை
அசைவற்றிருக்கும் நான் பார்வையைக்கூட
உங்கள் பக்கம் சுழலவிடாமல்
சிலாகித்துக் கொண்டிருக்கிறேன்
நீர் கசியும் சவர் குழாயில் நனைந்தும்
கண்ணாடியில் முகம் பார்த்தும்
தனது பிம்பத்தை கொத்தியபடி
என்னையும் சேர்த்து வீட்டில்
யாரும் இல்லையென நினத்து
விளையாடுகின்றன சிட்டுக்குருவிகள்

rathinamurthy

Series Navigationநூல் மதிப்புரை: எங்கும் ஒலிக்கிறது காற்று! கூர் 2011 கலை இலக்கிய மலர்!கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரு கதைகளுக்கு இடையே (கவிதை -40 பாகம் -2)