ஆகஸ்ட் 15, துபாயில் இந்திய சுதந்திர தின விழாவினையொட்டி சிறப்புக் கவியரங்கம்

ஆகஸ்ட் 15, துபாயில் இந்திய சுதந்திர தின விழாவினையொட்டி சிறப்புக் கவியரங்கம்

துபாய் : துபாயில் இந்திய சுதந்திரத்தின் 68 ஆம் ஆண்டு விழாவினைக் கொண்டாடும் வகையில் வானலை வளர்தமிழ் இலக்கிய அமைப்பின் சார்பில் சிறப்புக் கவியரங்கம் 15.08.2014 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு கராமா சிவ ஸ்டார் பவன் வளாகத்தில் நடைபெற உள்ளது என கவியரங்க ஒருங்கிணைப்பாளர் கவிஞர் காவிரிமைந்தன் தெரிவித்துள்ளார்.

விடுதலை எனும் தலைப்பில் கவியரங்க நிகழ்வு நடைபெற உள்ளது.

சிறப்பு விருந்தினராக ஈடிஏ மெல்கோ நிறுவனத்தின் முன்னாள் பொதுமேலாளர் முதுவை ஹசன் அஹமது சிறப்பு விருந்தினராக பங்கேற்று கருத்துரைகளையும், சுதந்திர தின சிந்தனைகளையும் வழங்க உள்ளார்.

அமீரகத்தில் கவிதை மற்றும் பன்முகத் திறமைகள் கொண்டவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிக்கொணர இக்கவியரங்க தளம் அமைத்துத் தருகிறது.

மேலும் கவிதை மட்டுமல்லாது பல்வேறு திறமைகள் கொண்டவர்களும் பங்கேற்று தங்களது திறனை வெளிப்படுத்தலாம்.

மேலதிக விபரங்களுக்கு 050 251 96 93 எனும் அலைபேசி எண்ணிலோ அல்லது kaviri2012@gmail.com எனும் மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம்.

அமீரகத்துக்கு வெளியே வசிப்பவர்கள் தங்களது கவிதைகளை மற்றும் ஆக்கங்களை விடுதலை எனும் தலைப்பில் அனுப்பலாம்.

நிகழ்விற்கான ஏற்பாடுகளை காவிரிமைந்தன், ஜியாவுதீன், ஆதிபழனி, திண்டுக்கல் ஜமால் உள்ளிட்ட குழுவினர் செய்து வருகின்றனர்.

Series Navigationதடங்கள்    திரும்பிவந்தவள்