ஆதியோகி கவிதைகள்

Spread the love
ஆதியோகி 
 
அந்த நடைபாதைச் சிறுமி
எழுதிக்கொண்டிருப்பதும்,
‘வீட்டு’ப்பாடம்தான்…!
***
உக்கிரமாய் அடித்து 
ஓய்ந்த மழைக்குப்பின்,
இதமாய் தூறிக் 
கொண்டிருக்கிறது வெயில்..‌.
***
சீரான வேகத்தில்தான் பூமி
சுழல்கிற போதும்
எனது இரவுகள் மட்டும்
ஏன் மெதுவாக நகர்கின்றன?
***
                             – ஆதியோகி 
Series Navigation2021 ஒரு பார்வைகவிதையும் ரசனையும் – 24 க.நா.சு