ஆத்ம கீதங்கள் –16 காத்ரீனா காதலனுக்கு எழுதியது.. ! என் ஆன்மாவின் முறிவு

This entry is part 9 of 23 in the series 15 பெப்ருவரி 2015

 

ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

 

மாளிகை அடித்தள அரங்கத்தின்

கீழிருக்கும் போது

ஊர்ந்து நகர்வாய் முன்போல்;

ஆங்கோர் முகத்தைக் காண்பாய்;

முன்பே அது உனக்குத்

தென்பட்ட பழைய

முகம் இல்லை தான் !

முணுமுணுப் பாயா அடிக்கடி ?

வலி மிகுந்து நான்

முனங்கு வதை நீ இங்கே

கவனித் திருக்கிறாய் !

ஒளிவீசும் விழிகள்

வெளிப்படுமோ இனிமேல் ?

 

மாளிகையில் வாழும் சீமாட்டிகள்

உன் நீர்த் தொட்டியைச் சுற்றி  

உட்கார்ந் துள்ள போது

உரைத்தி ருப்பார் இப்படி :

“கவிஞனே !

இரங்கல் பாக்களைப் பாடு

இறந்து போன ஒரு மாதுக்காய் !

துடிப்புறு வாயா ? அல்லது

நடிப்பாயா இன்னும் ?

தாறு மாறாய் ஏதோ பாடு வாயா

விழி நீர் இடையே சிந்தி ?

ஒளிவீசும் விழிகள்

வெளிப்படுமோ இனிமேல் ?

 

ஒளிமிகும் சுடர்விழிப் பார்வை

எத்தகை இனிய காட்சி !

திரும்பத் திரும்பக் கவிதைப் பாக்கள்,

பன்முறை நீ பாடிய போது

உன்னத மானதே கேட்கும் எனக்கு;

என் ஆன்மாவை முறுக்கி.

வையக அலறல் குறுக்கிடும் !

ஒளிவீசும் விழிகள்

வெளிப்படுமோ இனிமேல் ?

 

[தொடரும்]

++++++++++++++++++++++++++++++++++++

மூல நூல் :

From Poems of 1844

Elizabeth Barrett Browning Selected Poems

Gramercy Books, New York 1995

  1. http://wednesdaymourning.com/blog/elizabeth-barrett-browning-beyond-victorian-love-poems/
  2. http://en.wikipedia.org/wiki/Elizabeth_Barrett_Browning
  3.  http://www.online-literature.com/elizabeth-browning/

 

Series Navigationஎன்னை அறிந்தால் – திரைப்பட விமர்சனம்Caught in the crossfire – Publication
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *