ஆர்வம்


		தேர்வு எழுதி முடித்த 
		அடுத்த வினாடி 
என் மகன் என்னிடம் 
குதூகலித்தான் 
		விடுமுறை விட்டதென்று
		படிக்கையில் என்னை
	       பக்கம் வர அனுமதிக்காதவன்
		பென்சில் எடுக்கக் கூட
		அவன் அம்மாவை விரட்டியவன்
		தேர்வு முடிந்ததும் பாட நூல்களை
		அலமா¡¢யில் நேர்த்தியாக
		அடிக்கி வைக்கிறான்
		புத்தகங்களை அடுத்த ஆண்டு
		இலவசமாகக் கூட யாருக்கும்
		கொடுக்க வேண்டாம் என்கிறான்
		புத்தகங்கள் அவனை
		மிரட்டியிருக்கும்போலும்.

		 
உருவேற்றுவதில் இருந்து 
		மீண்டு வந்தவன் 
		படிப்பதற்கு எந்த உதவியையும்
		இதனை நாளும் எதிர்பார்க்காதவன்
		விளையாட்டுத் திடலை நோக்கி
		சிட்டாய் பறக்கிறான்
		இப்போது எல்லோரையும் விளையாட
		அழைக்கிறான்.
Series Navigationவாக்கிங்கதையல்ல வரலாறு -2-1: நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்