ஆலமரத்துக்கிளிகள்

Spread the love

பச்சை வயல்வெளி ..
பக்கத்தில் காவலுக்குப்
பனை மரங்கள்…!!
—————————————-

என்றும் நீ கூண்டில்..
நான் நீதிபதி..
மனசாட்சி.!
————————————–

பூமியை
அளக்கிறதோ..?
நெடுஞ்சாலைகள்..!
—————————————–

இரவும் பகலும்
ஒன்றுதான்
உறங்குபவனுக்கு..!
——————————————-

மீண்டும் தாய்வீடு…
நிம்மதியாய்….
விதைநெல்..!
_________________________

வான்மேகங்கள்
வேடிக்கை பார்க்கும்
பூமியில் சாகசங்கள்..!
_________________________

வில்லு போல் உடல்
புறப்படும் அம்பு..
குறிகோள்கள்..!
_________________________

கரும்புக் காடுகள்
இரும்புகளால்
முள்வேலி..!
_________________________

சிறு புல்லும் நெடு மரமும்
எண்ணுமாம் தாங்களே
பூமிக்குத தூண்..!
__________________________

நீ வேகமாய்ப் போனதால்..
நான் வேகமாய் வருகிறேன்…
ஆம்புலன்ஸ்..!
__________________________

மௌன ஊர்வலத்தில்
ஆக்ரோஷமாய்…
மனம்..!
___________________________

ஊர்வலத்தில்
மௌனமாய்
பிணம்..!
_____________________________

சாதுவான பசுவுக்கு
கொம்பும், குளம்பும்..!
தேவனின் நீதி….!
________________________________

கனிகளே இல்லாத கிளைகள்
இருந்தும் , ஆரவாரம்….
ஆலமரத்துக் கிளிகள்.!

===========================

ஜெயஸ்ரீ ஷங்கர்..

Series Navigationபத்மஜா நாராயணன் : மலைப்பாதையில் நடந்த வெளிச்சம்சும்மா வந்தவர்கள்