இக்கரைக்கு அக்கரை பச்சை

Spread the love

பவானி ரெகு

பச்சை தேவையெனப்
பித்தேறி மனம்
பகலிரவுப் பொழுதுகளைப்
பலியாக்கிச் சென்று,

அச்சம் இலா நெறி
அடி யொழுகியேனும்
அடர்பச்சைக்கு நிதம்
அடிபணிந் தேகும்.

இச்சகத்தில் இப்புறம் தேடா
இருமருங்கின் அப்புறம் காணும்
நிச்சயமற்றதை நினைந்தேங்கி,
நிம்மதி தொலைத் திங்கே வாழ்வு!

பவானி ரெகு

Series Navigationநாசா ஏவப்போகும் 2020 செவ்வாய்த் தளவூர்தி பூர்வ உயிமூலவி வசிப்பு தேடி, மனிதர் இயக்கும் பயணத்துக்கு குறிவைக்கும்ஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா