இடமாற்றம்

Spread the love

_________

கண்களுக்கு எதிரே
விரல்களுக்கு இடையே
நழுவுகிறது தருணங்கள்

 

இந்நாட்டு மக்களின்
மெல்லிய சிரிப்பை
அதிராத பேச்சுக்களை
கலைந்திராத தெருக்களை
நேர்த்தியான தோட்டங்களை

 

வாரிச் சுருட்டி
வெண் கம்பளத்தில் அடுக்கி
அணைத்தபடி உடன் கொணர நேர்ந்தால்
கை நழுவுகிற தருணங்களைப் பிடித்து விடலாம்

 

நேசித்தவைகளை அங்கங்கே விட்டுவிட
சொல்கிற ஒவ்வொரு இடமாற்றமும்
வாழ்விலிருந்து விடுபடுகையில் , மரணத்தை
நளினத்துடன் தழுவப் பயிற்றுவிக்கும் ஒத்திகைகள்……
– சித்ரா
(k_chithra@yahoo.com)

Series Navigationயாதுமாகி….,புகழ் ​பெற்ற ஏ​ழைகள் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்