வேர் மறந்த தளிர்கள் 3

This entry is part 40 of 40 in the series 26 மே 2013

3 சிறிய குடும்பம் மூவர் கொண்டது அவனது சிறியக் குடும்பம்.பெற்றோருக்கு ஒரே பிள்ளை பார்த்திபன். அவனைத் தவிற அந்த வீட்டில் யாரும் இல்லை. அந்தக் காலை வேளையில் வீடு மிகவும் அமைதியுடன் காணப்படுகிறது.அறையின் சன்னல் வழி வெளியே பார்க்கிறான்.அக்கம் பக்கத்திலுள்ள வீடுகளும் அமைதியில் மூழ்கியிருந்தன. வேலைக்குச் செல்வோரின் வாகனங்கள் மட்டும் சாலையில் நிதானமுடன் சென்று கொண்டிருந்தன.பண வசதி படைத்தவர்களும் கல்வியில் சிறந்தவர்களும் வாழும் குடியிருப்பு என்ற ஒரு மதிப்பீட்டுக்கு உள்ளடங்கிப்போன இடம் என்பதால் அனாவசியப் பேர்வளிகளும் அரட்டை […]

விஸ்வரூபம் – கலைஞன் எதைச் சொல்வது எதை விடுவது ?

This entry is part 39 of 40 in the series 26 மே 2013

மீண்டும் மீண்டும் கலைஞனின் முன்னுள்ள கேள்வி எதைச் சொல்வது எதை விடுவது என்பது பற்றித்தான். இந்தக் கேள்வி கலைஞனின் முன்னாள் மட்டுமல்ல, ஒரு சமூகத்தின் முன்னாலும் உள்ளது. ஒரு விமர்சகனின் அணுகுமுறை ஏன் இது சொல்லப் பட்டிருக்கிறது என்பதை ஆய்வு செய்வதும், அதன் பின்னால் உள்ள மனநிலையை, செய்தியை வெளிக்கொணர்வதும் தான். ஆனால் தேர்ந்த விமர்சகர்கள் தன் மனதில் ஆழப்புதைந்துள்ள முன்முடிவுகள், வெறுப்புகள், விருப்புகள், ஆதாரமற்ற புறக் காரணிகள் இவற்றைத் தாண்டி படைப்பினை அணுகவேண்டும். தேவர் மகனும், […]

நீங்காத நினைவுகள் -4

This entry is part 37 of 40 in the series 26 மே 2013

மே மாதம் 27 ஆம் நாள் நம் நாட்டுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த மறக்க முடியாத நாளாகும். மிகவும் துயரமான நாள். 1964 ஆம் ஆண்டின் மே மாதத்து 27 ஆம் நாளன்று தான் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு அவர்கள் காலமானார். இந்தியா விடுதலை அடைந்த நாளில் இருந்து அவர் மரித்த நாள் வரை தொடர்ந்து இந்தியாவின் பிரதமராக இருந்தவர். அவரை விட்டால் இந்தியப் பிரதமர் ஆவதற்குரிய தகுதி படைத்தவர் வேறு […]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்

This entry is part 30 of 40 in the series 26 மே 2013

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ( முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை)  முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 8.சமுதாயத்திற்கு வழிகாட்டிய ஏ​ழை…… என்னங்க….​யோசிச்சிகிட்​டே இருக்கிறீங்க…அவங்க இந்த சமுதாயத்​தை​யே இப்படித்தான் ​யோசிக்க வச்சாங்க…அவங்க அப்படி ​யோசிக்க வச்சதா​லேதான் சமுதாயத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுச்சு…அதனால நல்லா ​யோசிக்கிறதுல தப்​பே இல்ல…ஆனா இப்படி ​யோசிச்சிக்கிட்​டே இருந்தா எப்பத்தான் கண்டுபிடிப்பீங்க…மூ​ளையப் ​போட்டுக் கசக்காதீங்க..நா​னே ​சொல்லிட​றேன்..அவங்கதாங்க மூவாலூர் இராமாமிர்தம் அம்​மையார்…என்னங்க இவங்களத்தான் ​நெனச்சீங்களா?..நீங்க ​சொல்ல ​நெனச்சீங்களா..அதுக்கு முன்னா​லே […]

செம்பி நாட்டுக்கதைகள்……

This entry is part 38 of 40 in the series 26 மே 2013

மஹ்மூது நெய்னா உங்க ஊருக்கு எத்தனை பேருதான்யா? நீங்க பாட்டுக்கு வகை தொகை இல்லாம சொல்லிக்கிட்டே போனா எப்படி? நான் லீவுக்கு ஊருக்கு வந்ததை எப்படியோ அறிந்து, புதுக்கோட்டையிலிருந்து , என்னை பார்க்க, கீழக்கரை வந்த வீரசிங்கம் இப்படித்தான் கேள்வியை தொடுத்தான். இது என்ன கேள்வி….. என கடுப்பாகி…..நெளிந்தேன்… ………வந்தாரை வாழ வைப்பது மட்டுமின்றி, விருந்தாளிகளை அன்புடன் உபசரிக்கும் அருங்குணம் கொண்ட ஊர் கீழக்கரை என்ற சரித்திர உண்மை நம்மால் சந்தி சிரித்து விடக் கூடாது என்று […]

வளைக்காப்பு

This entry is part 36 of 40 in the series 26 மே 2013

டாக்டர் ஜி. ஜான்சன் வழக்கம்போல் வெளிநோயாளிப் பிரிவு ” பசார் மாலாம் ” போன்று பரபரப்புடனும், பெரும் இரைச்சலுடனும் இயங்கியது . காலை மணி பனிரெண்டைத் தாண்டியபோதும் காத்திருக்கும் கூட்டம் நீர்த்தேக்கம் போன்றே நிறைந்திருந்தது. மருத்துவர்களைப் பார்த்த நோயாளிகள் வெளியேறிக் கொண்டிருந்தத போதிலும் புது நோயாளிகள் வந்துகொண்டே இருந்தனர். நீர்த் தேக்கத்தில் நீர் வந்துகொண்டும் வெளியேறுவதுமாக இருந்தால் அதன் அளவு சற்றும் குறையாமல் அதே அளவில்தான் இருக்கும் . எனக்கு எப்போதுமே அந்த குறையாத கூட்டம் நீர்த்தேக்கத்தையே […]

அக்னிப்பிரவேசம்-35 தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்

This entry is part 35 of 40 in the series 26 மே 2013

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com பதினைந்து நாட்களாய் பீடி தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் நடந்து கொண்டிருந்தது. பாவனாவின் தொகுதியில் சில ஆயிரக்கணக்கான பீடி தொழிலாளர்கள் வசித்து கொண்டிருந்தார்கள்.’அதில் நிறைய பேர் பெண்கள்தான். அவள்களுடைய ஓட்டுக்கள் தான் அவளுக்கு நிறைய கிடைத்தன. பாவனா அவர்கள் சார்பில் சமரசம் பண்ண ,முயன்றாள். “மேடம்! நீங்கள் எங்கள் நிலைமையைக் கூட புரிந்து கொள்ளணும். பீடி உற்பத்தியில் வரும் லாபம் மிகவும் குறைவு. இப்போ கூலியை […]

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் 11

This entry is part 34 of 40 in the series 26 மே 2013

ஜோதிர்லதா கிரிஜா தயா தன் அலுவலகத்துள் நுழைந்து, பிரிவுக்குள் சென்றடைந்த போது, சங்கரன் ஏற்கெனவே வந்து உட்கார்ந்து கொண்டிருந்தான். மணி ஒன்பதரை கூட ஆகியிருக்கவில்லை யாதலால், வேறு யாரும் வந்திருக்கவில்லை. இருவருக்கும் பக்கத்துப் பக்கத்து இருக்கைகள். தயா கைப்பையை மேசை மீது போட்டுவிட்டு முகத்தைப் பொத்திக்கொண்டு அழத் தொடங்கினாள். எப்போதும் தமாஷாக ஏதேனும் பேசிச் சிரிப்பதையே இயல்பாகக் கொண்ட தயா அழுதது சங்கரனை வேதனையில் ஆழ்த்தியது. சீனு கொண்டுவந்து கொடுத்த அவள் கடிதத்தைப் படித்ததும் தனக்கே கண்கள் […]

மெனோபாஸ்

This entry is part 32 of 40 in the series 26 மே 2013

  டாக்டர் ஜி.ஜான்சன் மெனோபாஸ் என்பது என்ன? மாதவிலக்கு நின்று 12 மாதங்கள் ஆகிவிட்டால் அதை மெனோபாஸ் என்கிறோம். சராசரியாக பெண்கள் 51 வயதில் இதை அடைகிறார்கள். ஆனால் 45 முதல் 55 வயதிலும் இது உண்டாகலாம்.இதைக் கூற பரிசோதனைகள் ஏதும் தேவையில்லை. மெனோபாஸ் எய்தும்பொது என்ன ஆகிறது? இந்த காலக் கட்டத்தில் பெண்களின் உடலில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகின்றன.ஹார்மோன் அளவில் மாற்றங்கள் ஏற்படுவதால் இவை நிகழ்கின்றன. சில பெண்கள் எவ்வித அறிகுறியும் இன்றி மெனோபாஸ் எய்துகின்றனர்., […]