இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் (ISF)தம்மாம் கிளை துவக்கம்!

கடந்த 25.05.14அன்று மாலை தம்மாம் அல்-கய்யாம் ரெஸ்டாரண்டில் இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் தம்மாம் கிளையை சகோ.இபுராஹீம் பாதுஷா திருமறை வசனம் ஓதி துவக்கி வைத்தார்.

கடையநல்லூர் சைபுல்லாஹ் ISF பற்றிய அறிமுக உரை நிகழ்த்தினார்.இந்திய அரசியல் அமைப்பு சட்டமும்,ஜனநாயகமும் என்ற தலைப்பில் ISF கிழக்கு மாகாண தலைவர் மௌலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி சிறப்புரையாற்றினார்.

காயல் அபுபக்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.நரிப்பையூர் குதுபுதீன் நன்றியுரையுடன் நிகழ்ச்சி முடிவடைந்தது.முன்னதாக தம்மாம் கிளையின் புதிய நிர்வாகிகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தகவல்
கீழை ஜஹாங்கீர் அரூஸி

Series Navigation