இந்தியா அதிரும் அன்னா ஹசாரே எழுச்சி….

This entry is part 39 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

இந்தியாவின் உள்துறை அமைச்சர் வேதனையான முகத்துடன் , ”அன்னா ஹாசாரேவை கைது செய்யும் முடிவு வலிதரக்கூடைய விஷயம்” – என்று தொலைக்காட்சியில் சொன்ன போது தான், இந்திய குடிமகன்கள் பலருக்கு வலி பரவியது ஆரம்பித்தது…

அதன் வெளிப்பாடு தான் இன்று இந்தியா எங்கும் திரளும் இந்த ஆதரவு…

“பாரத் மாத்தா கி ஜெ…”

“இன்குலாப் ஜிந்தாபாத்..”

எனும் கோஷங்கள் கிளர்ந்தபடி, சைக்கிள், பைக், கார், வேன் நடை… என்று பாரத தேசிய மணிக்கொடியை கையில் ஏந்தி திரளுகிறதே கூட்டம்…..  இது கொஞ்சம் கொஞ்சமாக கூடிக்கொண்டே இருக்கிறது….

இரண்டாவது சுதந்திரப் போராட்டம் என்பது மிகைப்படுத்தப்பட்ட சொற்றொடர் என்று விமர்சிப்பவர்கள், உண்ணாவிரத மேடையில் காந்தியும் பகத்சிங்கும் படங்களாக இருக்க…. மகாத்மா காந்திக்கு ஜெ என்கிறார்களே… அதுவும்…

 

20லிருந்து 80வரை உண்ணாவிரதத்தை பல ஊர்களில் தொடர்கிறார்கள்…

நான் சென்னை, அடையார், எல்.பி ரோட்டில் ஒரு கட்டிடத்தில் நடந்த உண்ணாவிரதத்தை சென்று பார்த்தேன்…

கூட்டத்தில் தரம் இருந்தது.. உணர்ச்சிமயம் வழிகிறது…

பாதுகாப்பிற்கு தடியேந்திய போலீஸ் இன்றி கூட்டம் தம்மைத் தாமே சீர் செய்து கொள்கிறது…

குவாட்டருக்கும், கோழி பிரியாணிக்கும் அழைத்து வரப்படாமல், தினமலர், தி ஹிந்து பத்திரிக்கைச் செய்திகள், டிவி செய்திகள் என்று பரவி கூட்டம் வருகிறது….

சாத்தான்கள் வேதம் ஓதுவது போல், கொள்ளையர்கள் பலர் இன்று காங்கிரஸை ஆக்கிரமித்து அட்டூழியம் செய்கிறார்கள் என்று நிதர்சனமாக அங்கிருக்கும் கூட்டத்தின் கோபத்தில் தெரிகிறது…

எந்த கட்சியும் சாராமல் தேசிய கொடியை கையில் ஏந்தி ஊழல், மற்றும் லஞ்சத்தை எதிர்த்து திரண்டு வரும் இந்த கூட்டம், ”..வெள்ளையனே வெளியேறு என்றது அன்று, கொள்ளையர்களே வெளியேறுங்கள் என்பது இன்று..” என்று அரங்கத்தின் எதிரில் அடி மனதில் இருந்து கத்துகிறார்கள்… நம் கண்களில் கண்ணீர் வருகிறது…

ஏன்… அந்த கண்ணீர்…

இயலாமையாலா..? இல்லை மாற்றம் வரும் என் தேசத்தில் என்று ஒவ்வொருவரும் நினைக்கும் நம்பிக்கை விதைக்கான அறிவிப்பு…

அன்னா ஹாராரே, யார்…? அவர் டிரஸ்டில் ஊழல் பண்ணினார்.. அது இது என்று பேசி அவரது கோரிக்கைகள் நசுக்க அவரை கேவலப்படுத்த முயற்சிக்கும் அரசுக்கு ஒரே ஒரு பதில் தான்…

வால்மீகியின் காவியம் படிக்கப்படும் போது, முன்பு அவர் யார் என்பது அறிந்தும் மக்கள் பொருட்படுத்தவில்லை….

 

அதனால் அன்னா ஹாசாரே யார் என்பது விடுத்து… அவர் சொல்வதின் சரி, தவறு பற்றி ஆட்சியாளர்கள் சொல்லட்டடும்…

பாரளுமன்றத்தின் பிரதிநிதிகள் என்ற ஆணவத்தில் திஹார் சிறையில் அடைத்தால்… அடைத்தவர்கள் திவால் ஆவது உறுதி…

நெஞ்சினின் கனலாக குமைந்து கொண்டிருந்த அக்னிக் குஞ்சுகள் ஆங்காங்கே திரளுகின்றன..

 

இனி இவை திரளும்.. அணி சேரும்.. நெருப்பாய்.. தீப்பந்தமாய் ஆகி கயமைகளை அழிக்கும் அதுவே நடக்கும்…

அன்னா ஹசாரேயும் தனது நிலை சிதறாமல் இருக்க, சற்றே நிதானமுடன் பல்முனை பல்மாநில மக்கள் சார்ந்த கமிட்டி அமைக்க வேண்டும்…

அவரது அணுகுமுறையில் இருக்கும் குறைகளை களைய வேண்டும்…

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்கு கால நிர்ணயம் செய்தல் சரியல்ல…

ஏற்கனவே லஞ்சம் ஒழிக்க பல சட்டங்கள் ஏற்கனவே இருக்கின்றன.. அதனால் புதிதாக சட்டம் இயற்றுதல் தாண்டி, ஏன் தினசரி வாழ்வில், போலீஸ், ஆர்டிஓ அலுவலகம், பத்திரபதிவு அலுவலகம், கலெக்டர் அலுவலக ஆகியவற்றின் கோளாறுகளை சரி செய்ய முயற்சிக்கக் கூடாது…

அட்டென்ஷன் சீக்கிங் சின்ட்ரோம் மாதிரி அன்னா போய் விடக்கூடாது.

கூட்டத்தில் எத்தனை பேர், பில் போட்டு நகை வாங்கியிருந்தார்களோ..?

எத்தனை பேர், சீக்கிரம் காரியம் நடக்கனும் என்று கையூட்டு தருகிறார்களோ.. இல்லை பெறுகிறார்களோ….

தேவை ஒரு புரட்சி… அதற்கான ஆரம்பம் தான் இது…

எல்லா காட்டாறுகளும் சிறு ஊற்றாய் தான் ஆரம்பிக்கின்றன…

அது தான் இதுவும்…

அந்தக் காட்டாற்றாறு வெள்ளத்தில் கயவர்கள் களையெடுக்கப்படுவார்கள்…

எது எப்படியோ…

அன்று எப்படி ஒரு தாத்தா உப்பு கரைத்தது உலகளாவிய வகையில் வரலாறு படைத்ததோ….

அதே நிலை தான் இன்றைய அன்னா ஹாசாரேயின் உண்ணாவிரதமும்…. நடக்க  வேண்டும்..

இனி ஒவ்வொரு கவளமும் இந்த ஆட்சியாளர்கள் விழுங்கும் போது இவரது உண்ணாநிலையின் காரணம் அறியட்டும்…

சென்னை, அடையார் உண்ணாவிரதத்தில், இரண்டு பேருக்கு பைல் செக்ரியேஷன் பிரச்சனையென்று அங்கிருந்த டாக்டர் அவர்களை வற்புறுத்தி உ.விரதத்தை முடித்துக் கொள்ளச் சொன்னார்…

ஆனாலும், பலர் தொடர்ந்து கொண்டு…

ப.சிதம்பரமும், கபில்சிபிலும் இந்த கூட்டம் சாமான்யர்களின் நொந்து வெந்த கூட்டம்… சாது மிரண்டால்… என திரளும் கூட்டம் என்பது புரிந்து இந்த விஷயத்தில் அரசியல் செய்யாமல் நடத்தல் நன்று..

அமுக்கினி பிரதமர் இனியாவது தனது பதவிக்கு உண்மையாய் இருக்க வேண்டும்… இல்லாவிடில் அதிகம் வெறுக்கப்பட்ட பிரதமராய் ஆகி விடுவார்…

சென்னை, அடையார் பகுதி உண்ணாவிரத கட்டிடத்தின் அருகே எடுக்கப்பட்ட ஒரு ஊர்வலம் பார்க்க…

http://www.youtube.com/watch?v=KyLc59qTEZI

 

 

பாதகம் செய்பவரை கண்டால் நீ

பயம் கொள்ளல் ஆகாது பாப்பா…

மோதி மிதித்து விடு பாப்பா

அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா…

 

சக்தி தருவாய் பாரதி இந்த

சாத்தான்களை வென்றிட….

 

கோவிந்த் கோச்சா

 

Series Navigationதமுஎகச இலக்கியப் பரிசு – முடிவுகள் அறிவிப்புபேசும் படங்கள் ::: கோவிந்த் கோச்சா
author

கோவிந்த் கோச்சா

Similar Posts

2 Comments

  1. Avatar
    Sathyanandhan says:

    இந்திய ஜனநாயக அமைப்பு ஊழல் செய்ய முனையும் அரசியல்வாதிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் ஒரு வாகனமாக அல்லது ஒரு கருவியாக உருவெடுக்கும் அளவு போய் உச்ச நீதிமன்றமோ அல்லது தலைமைத் தணிக்கை ஆணையமோ தலையிட்டால் மட்டுமே விடிவு என்னும் அளவு போய் உலக அரங்கில் நமக்கு அவமானமாகி விட்டது. தட்டிக் கேட்க யாருமே இல்லாத போது அண்ணா ஹசாரே வடிவில் நம் தன்மானம் மீட்கப் பட்டுள்ளது. இந்திய வரலாறை மாற்றி எழுதும் இந்தப் பேரியக்கத்தின் காலத்தில் நாம் வாழ்வது நம் தாத்தாக்கள் சுதந்திரப் போரை நம்பிக்கையுடன் பார்த்திருந்த காலத்துக்கு ஒப்பாகும். இந்தப் போராட்டம் நீண்டதாகவும் மக்கள் ஒவ்வொரு துறையிலும் லஞ்சம் தர மறுக்கும் தன்னம்பிக்கையும் லட்சியப் பற்றும் வரும் வரை தொடருவதாகவும் இருக்கும். அண்ணா ஹசாரேவின் வெற்றி மக்களின் வெற்றி. இப்போது காணும் எழுச்சி மேலும் வலுப்பெற்று சமரசமின்றி ஊழலை நிராகரிக்கும் முதுகெலும்புள்ள இந்தியா நிமிர்ந்து நிற்கும். சத்யானந்தன்

  2. Avatar
    Punnagai says:

    இன்று இந்தியப்பாராளுமன்றம் தோற்கடிக்கப்பட்டது. இந்திய மக்கள் வெற்றி பெற்றார்கள். அன்னாவின் வெற்றி மக்களின் வெற்றி.

    இந்தியப்பாராளுமன்றத்தின் தோல்வி சாத்தான்களின் தோல்வி. கம்சனுக்கும் கிருஸ்ணருக்கும் நடந்த போரில் கிருஸ்ணர் வெற்றிபெற்றார்; கம்சந்தான் இந்தியப்பாராளுமன்றம். கிருஷ்ணர்தான் அன்னா கஜாரே. மக்கள் கிருஸ்ணர் பக்கம்.

    இவ்வெற்றியை நாம் இதோடு விட்டுவிட்டால் இந்தியப்பாராளுமன்றம் சூழ்ச்சிசெய்து நம்மைக் கவுத்துவிடப்பார்க்கும். அதற்கு ஒரே வழி. நான் ஜனநாயக வழியை விட்டுவிட்டு, அமெரிக்க ஜனாதிபதி வழியை ஏற்க வேண்டும். எம்பிக்கள் அமைச்சர்கள் என்று அனைத்து அரசியல்வாதிகளும் இருக்கமாட்டார்.

    அன்னா போன்றோரை நேரடியாகவே நம் ஜனாதிபதியாக்கி அவரிடன் முழு அதிகாரத்தையும் அளித்து ஊழலையொழிக்கும் சட்டத்தைத் திறம்பட நடத்தி நாட்டை நம் பொன்னாடாக ஆக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *