இந்த நேரத்தில்——

க.சோதிதாசன் 
இந்த நேரத்தில்
இறுதி முத்தத்தை பகிர்ந்து
விடை பெறுகிறது ஓர் காதல்
இன்னோரிடத்தில்
கண்களின் வழியே உயிருள் நுழைகிறது

விண்மீன்களின் ஒளியில்
இரவு பாடலை ரசிக்கிறது ஓர் உயிரி
சூரிய தகிப்பால்
வியர்வை நதியால் வெப்பம் குறைக்கும் ஓர் மானிடம்

 

இந்த நேரம்

அகால வேளைகாரணமின்றி கைதுசெய்யப்படும்

மகனுக்காக கதறுகிறாள் ஒருபெண்

விடுதலை பாடலை பாடி
உயிர் விதைக்கிறான் ஓர் போராளி.

சிலர் கனவுகளில் இன்பம் துய்கிறார்கள்
பலர் மரணக்கனவுகள் கண்டுவிழித்து
வியர்வையில் விழுகிறார்கள்

ஏதோ ஓர்முலையில்
இனிய சங்கீதம் ஒலிக்கிறது
இன்னுமோரிடத்தில் பேரழிவு குண்டொன்று
விழுந்து கொண்டிருக்கிறது

இந்த நேரத்தில்
யாரோ சிலர்
இந்த கவிதையை படித்து கொண்டிருக்கிறார்கள்.

 

 

 

யாழ்ப்பாணம்.

Series Navigationவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 27Kobo Books தளத்தில் ரெ.கா.வின் மின்னூல்கள்