இந்நிமிடம் ..

இந்நிமிட குப்பிக்குள்

பழைய நினைவுகளை

புதிய நினைவுகளை

திணிக்க திணிக்க

திமிறி ஓடுகிறது அமைதி..

இந்நிமிட கொள் அளவில்

வைக்க வேண்டியதை மட்டும்

வைத்து எடுக்க எடுக்க -இந்நிமிடம்

அடுத்த ,அதற்கடுத்த நிமிடம் ..

மாற்று நிறங்களின் தறி பாவில்

ஊடு நூலாக – வளைந்து புகுந்து

அமைதியை நெய்ந்து தருகிறது

இந்நிமிடங்கள்…

– சித்ரா (k_chithra@yahoo.com)

Series Navigation”ஒழுக்கமானவர்களைப்” புரிந்து கொள்வதுவெயில் விளையாடும் களம்