இப்படியாய்க் கழியும் கோடைகள்

எஸ். ஸ்ரீதுரை

            கொதிக்கும் வெய்யிலில்

            புகைவண்டிப் பயணம்

            அம்மாவின் கட்டுச்சோறு

            சலங்கை கட்டிய குதிரை வண்டியில்

            மாமன் வீட்டை அடைதல்

            கொல்லைப்புறத்துக் காவிரியில்

            மாமன் மகன்களுடன் கும்மாளம்

            டெண்ட்டுக்கொட்டாயில் கட்டபொம்மன் நைட்ஷோ

            மலைக்கோட்டை சமயபுரம்

            மனசுகொள்ளாத சந்தோஷம்

            மாசம் ஒன்று கழிந்ததும்

            பட்டுச்சொக்காய் பட்சணங்களுடன்

            மனசு கனக்க ஊர் திரும்புதல் என்று

            மனுஷப்பிறவிகள்

            சொந்தம் கொண்டாடுவதையும்

                    2

            அழித்துப்போட ஒரு சுனாமி வந்து சேர்ந்தது….

            இப்போதெல்லாம்

            ஐ ஐ டி நினைப்பும்

            அமெரிக்கக் கனவும்

            சம்மர் க்ராஷ் கோர்ஸும்

            கோச்சிங்க் கிளாஸுமாகக்

            கழிகின்றன

            எங்களை அடுத்த

            இளைய தலைமுறையினரின்

            கோடை விடுமுறைகள்.

                   ****  **** **** ****

Series Navigationஒற்றைத் தலைவலிதீர்ப்பு