இப்படியிருந்தா பரவாயில்ல

முருகன்ங்க
வயசு சரிய தெரியல்லை 34 ன்னு எழுதிக்கோங்க
நான் 2 தாங்க மேலே படிக்கிலங்க ஆம் எனக்கு படிப்பு வராதுன்னு டீச்சர் சொல்லிட்டாங்க
கல்யாண ஆச்சுங்க
ஒரே பையன் 4 படிக்காங்க
இங்கிலிஷ் ல பேசுறாங்க
எல்லா வேலையும் செய்வேன்க கூலின்னு போட்டுக்கோங்க
திருநெல்வேலி வரைக்கும் தான் போயிருக்கேன்
ரேசன் கார்டு இருக்குங்க அரிசி வாங்குவேன்ங்க
பழையதுங்க இரவுக்கு நெல் சோறுங்க
பலகாரம்ல்ல நல்ல நாள் பொழுதுல்ல தாங்க
சட்டை கல்யாண காட்சிக்கு போனதாங்க,
அழுக்கு வேட்டியா ஆமாங்க வேலையில அழுக்காகுங்க
முதல் மநதிரியில்லாம் தெரியாதுங்க
எம்ஜிஆர்க்கு ஓட்டு போடுவங்க
ஊழலன்னா என்ன தெரியாதுங்க
ஆமாங்க காசு கொடுப்பாங்க
எம்ஜிஆர்க்கு தாங்க ஓட்டு போடுவேன்
வேலையில்லைன்ன வேப்பமரத்து மூட்ல
தலை சாய்ச்சுக்க வேண்டியதாங்க
உடம்புக்கு சரியில்லன்ன கசாயம் கொடுப்பாங்க
சரியாகல்லனே அரசாங்க ஆஸ்பத்திரிக்குங்க
என்னங்க செய்யு முடியும்
நம்ம விதி அவ்வளவுதான்

——————-

Series Navigationமனித பொம்மைகளும் பொம்மை மனிதர்களும்சந்திராஷ்டமம்!