இயன்ற வரை

Spread the love

 

 

நாசூக்காகக் காய்களை

நகர்த்துகிறவர்கள்

 

இரண்டு மூன்று

நகர்வுகளை யூகிக்க

வல்லவர்கள்

 

கடிகார முள் சுருதியுடன்

பேதலிக்காத

அலை அசைவுக்

கடல்களானவர்கள்

 

யாரிடமிருந்தும்

கற்பவை கற்றிடக்

கூடவில்லை

 

ராட்சத வணிக

வளாக நகர்

படிக்கட்டுகளுள் ஒன்றைத்

தேர்ந்தெடுத்து

காலெடுத்து வைப்பதை

மட்டும்

நகல் செய்ய

இயன்றது

Series Navigationகுன்றுகளைக் குடைந்து கடலடியிலே தோண்டிய உலகிலே நீண்ட ஜப்பான் செய்கான் அதிசயக் குகைகர்ணனுக்காக ஒரு கேள்வி !