இயற்கையுடன் வாழ்வு

Spread the love

குணா

வலையை அமைக்க கட்டுண்டது ஈ

வலைதளம் அமைக்க கட்டுண்டது நாம்

நம்மை ஒதுக்கி வாழ்ந்தது விலங்கினம்

நாம் அடங்க வெளி வந்தது விலங்கினம்

இயற்கைச் சூழலை நாடுவது நாம்

இயற்கை பொங்கிட அடங்குவது நாம்

இயற்கையை ஒன்றியதே வாழ்க்கை

இயற்கையை குறைப்பதா வாழ்க்கை

கனவு காண்பது நாம்

நனவாய் நிற்பது இயற்கை

இயற்கையாய் இருந்ததில் இழப்பில்லை

செயற்கையை உயர்த்திட இழப்பு

செயற்கையும் இயற்கையின் பிறப்பெனில்

இழப்பில்லை

இயற்கை வளர்வதில் அடங்கிடில்

இழப்பில்லை

செயற்கையின் மீறல் இயற்கையின் சீற்றம்

நம்மிலும் மீறிட அடங்கு

நம்மை மீறிட அடங்க மறு

வாழ்வு தான் எல்லை

வாழப் பிறந்த நாமும் இயற்கை

உணர்ந்திடில் இழப்பில்லை

இழப்பினில் வாழ்வில்லை

இயற்கை தான் எல்லை

இயற்கை மட்டும் தான் எல்லை

  • குணா (எ) குணசேகரன்

Series Navigationஒற்றைப் பனைமரம்நுரை