இருள் கடந்த வெளிச்சங்கள்

மஞ்சுளா                             மதுரை

ஒரு விளக்கை 

ஏந்தியபடி 

நின்று 

கொண்டிருக்கிறேன் .


யாருடைய 

முகமும் 

தெரியவில்லை .


ஒரு நிழல் 

மட்டும் 

அசைந்தது 
அதுவும் 

என் 

சாயல் 


விளக்கு

 என்னை 

விளக்கவில்லை 


அது 

பிறரின் 

முகம் காண 

மட்டுமே  
வெளிச்சங்கள் 

அவர்களுக்கான 

போது 
இருள் 

எனக்கானது 
                        -மஞ்சுளா                             மதுரை

Series Navigationஇதற்கு பெயர்தான்…ஒற்றன்