இவளும் பெண் தான்

ஜெனிதா மோகன்  நற்பிட்டிமுனை, கல்முனை

                       மாலை நேரம் மனதை மயக்கும் கடற்கரை அழகு.மெய் மறந்து இரசித்துக் கொண்டிருந்தாள் மல்லிகா. கவி வரிகள் அவளுள் ஊற்றெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. மனசு இதமாக இருந்தது. இப்படி ஒரு நாள் நினைவுக்கு வந்தது. சில வருடங்களுக்கு முன்னர் நடந்தவைகள் அவளது நினைவலைகளில் வந்து சேர்ந்தன

மல்லிகா சமூக சேவை என்று அர்ப்பணிப்புடன் கடமை புரிபவள். ஒரு நாள் அலுவலகத்தில் அவளை பார்க்க ஒருவர் வந்திருந்தார். “கதிரை ஒன்று போடுமாறு” சிற்றூழியரிடம் சொன்னாள் மல்லிகா. கதிரையில் அமர்ந்தார். “நான் மதன், நாங்களும் உங்களோட இணைந்து வேலை செய்ய வந்துள்ளேன்” என்றான்.  அதற்குரிய கடிதங்களையும் காட்டினார். மிகவும் மகிழ்ச்சி என்றாள். ” சமூகத்தில் உங்களை போல் அர்ப்பணிப்புடன் சேவை செய்ய்பவர்கள் தான் வேண்டும்” என கூறி விடைபெற்றார்.

மல்லிகாவும் எந்த சஞ்சலமும் இன்றி சாதாரணமாக தன் வேலைகளை  பார்க்க தொடங்கினாள்.

பல நிகழ்வுகளை இருவரும் இணைந்தே நடத்தினர். பல்வேறு பாராட்டுக்க்களையும் பெற்றனர்.

வேலை திட்டங்களை பேசும் போது தனிப்பட்ட விடயங்களையும் பேச தொடங்கினர். காலங்கள் கடந்து போக நட்பாக மாறியது மல்லிகா, மதன் உறவு. மல்லிகா மதனுடன் பேசும் போது மகிழ்ச்சியாக இருப்பதாக உணர்ந்தாள். அதனால் அடிக்கடி மதனுடன் கதைக்க அழைப்பு எடுப்பாள். மதனும் அன்பாகவே பேசுவான்

காலங்கள் கடந்து போக இருவருக்கும் இடையிலான நட்பு காதலாக மாறியது. காதல் மழையில் நனைய கவிதைகளும் பரிமாற தொடங்கின. காலம், நேரம் மறந்து கதைக்க தொடங்கினர்.

காலையில் எழுந்தவுடன் ” குட் மோனிங்” இரவு தூங்க முன் “குட் நைட்” என தொடங்கி இருவரும் ஈருடல் ஓருயிராக மனதளவில் இணைந்துவிட்டனர்.

சிறு நோய் என்றாலும் மதன் துடித்துப்போவான். “அதை செய்ங்க, இதை செய்ங்க” என சொல்லிக்கொண்டேயிருப்பான். மல்லிகா பல சமயம் கண்கலங்குவாள் இப்படி ஒரு அன்பு தனக்கு யாரிடமிருந்தும் கிடைக்கவில்லை என்று.

மல்லிகாவை தவறாக பேசிய சந்தர்ப்பம் எதுவுமல்லை. அவள் எது சொன்னாலும் தலையசைப்பான். “பிழையாக செய்திட்டேன்” என அவள் சொன்னால் கூட ” இல்லை நீங்கள் செய்தது சரிடா” என்பான். எப்பவும் மல்லிகாவுக்கு அறிவுரை கூறுவான்.” யாருக்காகவும் நீங்க மாறவேண்டாம் நீங்க நீங்களாக இருங்க” என்பான். பல சமயம் அவன் உறவு கிடைத்தமைக்கு கடவுளுக்கு நன்றி சொல்வாள். மதன் கொடுத்த தைரியம், அவன் பின்னால் இருக்கின்றான் என்ற பலம் போன்றவை தான் மல்லிகா பல பிரச்சினைகளை சமாளிக்க உதவியாக இருந்தது. மல்லிகா எதுவாக இருந்தாலும் மதனிடம் தான் முதலில் சொல்வாள். அதில் அவளுக்கு ஒரு திருப்தி.

இந்த அழகான உறவில் யார் கண் பட்டதோ தெரியாது.

மதன் ஒரு மாத காலமாக தனக்குள்ளே புழுங்கிக்கொண்டிருந்தான்.  “இன்று எப்படியோ சொல்லி விடவேண்டும்” என நினைத்தான். “மல்லிகா கொஞ்சம் பேசணும் என அழைத்தான். வார்த்தைகள் தடுமாற ” வாய், ரேக்கெயார்” என்று நகர்ந்தான். மல்லிகாவுக்கு ஒரே குழப்பம்.

ஒரு நாள் மல்லிகாவின் காலை தொட்டான். அவள் வேகமாக ” என்னாச்சு மதன்” என்று காலை எடுத்தாள். “என்ன  வேலை இதென்று கண்கலங்கினாள். அவளுக்கு எதுவும் புரியவில்லை. சில நாட்கள் வேகமாக ஓடின.

ஒரு நாள் அலுவலகத்திற்கு சென்ற மல்லிகாவை அழைத்தான். அவளும் அவனை பார்க்கும் மகிழ்ச்சியில் கற்பனைகள் சுமந்தவளாக உள்ளார புன்னகையுடன் சென்றாள். “மல்லிகா நான் வெளிநாடு போகவேண்டும்” என போட்டுடைத்தான். அதிர்ந்து போனாள். உலகமே இருளானது போல் உணர்ந்தாள். பேச வார்த்தையின்றி மௌனமானாள். “மல்லிகா ஒரு மாதமாக சொல்ல முடியாமல் தவிர்த்து கொண்டிருந்தேன். “இப்ப தான் கொஞ்சம்… என இழுத்து தலை குனிர்ந்தான். என்னால் எதையும் யோசிக்க முடியல்ல. என் கையில எதுவும் இல்லை” என சொல்லி நகர்ந்தான்.

மல்லிகாவுக்கு அவனது வாகன சத்தம் காதில் விழ சுயநினைவுக்கு வந்தாள். ஓவென அழவேண்டும் போலிருந்தது. “கேட்காமல் கிடைத்த வரம் நீ, சொல்லாமல் சென்றிருக்கலாம்” என புலம்பினாள்.

அழுகையை கட்டுப்படுத்தியவளாக, நிலை குலைந்தவளாக அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள்.

தலையில் இடி விழுந்தது போல எல்லாமே முடிந்து விட்டது. கண்ணீர் மட்டும் சொந்தமானது. ஊமையானாள். கண்களிலிருந்து வந்த கண்ணீரை விரல்கள் துடைக்க கடல் அலைகள் அப்போது தான் அவள் காதுகளை வந்தடைந்தது. நிலைமையை புரிந்த அவளது நண்பி றாதா ” மல்லிகா போவோம். நேரமாச்சு, அலையில உடைகள் நனைஞ்சிற்று” என்றாள். “ம்ம்” என்ற சத்தத்துடன் எழுந்து நடந்தாள். இந்த கடற்கரை பயணத்தில் தன்னோடு மதன் இல்லை என்று உணர்ந்தாள்.

நாட்கள் நகர்ந்தன. மதனும் வெளிநாடு போய் நீண்ட நாட்களாகிவிட்டது. அவனது தங்கை மல்லிகாவை தேடி வந்தாள். ஒரு சேலையை மல்லிகாவிடம்  மதன்  கொடுக்க சொன்னதாக கூறினாள்.நீங்கள் பாவம் என அடிக்கடி சொல்வான். கவலைப்படவேண்டாம் என ஆறுதலாக பேசி சென்றாள்” எங்கிருந்தாலும் அவன் நன்றாக இருக்கவேண்டும்” என இறைவனை தினமும் பிரார்த்திப்பாள். பல சமயம் “. நெருப்பில் பட்ட புழு போல்” துடிப்பாள்.

மல்லிகாவின் மனதை அவனை தவிர யாராலும் புரிந்து கொள்ள முடியாது. அவன் அவ்வளோடு எதுவித தொடர்புமின்றி அவனது கடமைகளை பார்த்தான். அவனது அழைப்புக்காக மல்லிகா காத்துக்கொண்டிருந்தாள்.தினமும் ஏமாற்றம் தான் அவளுக்கு கிடைத்தது. காலங்கள் வேகமாக நகர்ந்தன. ” கானல் நீர் தான் என் காதல்” என கண்கலங்குவாள். வேறு என்ன செய்ய முடியும் அவளால்.

அவன் நினைவுகளை சுமந்த படி வாழ நினைத்தாள். “அவன் காட்டிய அன்புக்கு அவள் செய்யும் நன்றிக்கடன்” என நினைத்தாள்.

அவன் ஆசைப்படி தைரியமான பெண்ணாக, மற்றவர்களுக்கு உதவும் பெண்ணாக,வாழ்க்கையில் முன்னேறும் பெண்ணாக வாழ முடிவெடுத்தாள். அதில் வெற்றியும் பெற்றாள்.

மதனை போல் மல்லிகாவும் சமூக சிந்தனை உடையவர்கள். சமூகத்திற்காக அர்ப்பணிப்புடன் கடமை செய்பவர்கள். சுயநலமில்லாத பொதுநலமானவர்கள். நடுநிலையாக யோசிப்பவர்கள்.ஜதார்த்தத்தை புரிந்து கொள்வர்கள்.

மல்லிகா அவன் நினைவாக “அன்பு இல்லம்” ஒன்றை கட்டினாள். அனைவரையும் அன்புடன் அழைப்பாள். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்கிறாள். பிரச்சினைகளுடன் வருபவர்கள் அதிலிருந்து மீள வழிகாட்டுவாள். அன்பின் பாதையில் பயணிக்கிறாள். தடைகளை உடைக்க அவன் அறிவுரைகளை நினைக்கிறாள். சுகமான அவன் நினைவுகளை சுமக்கிறாள்.

Series Navigationகண்ணதாசன்