உண்மை நிலவரம்.

Spread the love

ஞா.தியாகராஜன்

இந்த நகரத்தில் விலையுயர்ந்த வாகனங்கள்
இருக்கின்றன
இந்த நகர்த்தில் அனைவரும் யாரின்
கைகளையோ இறுக்கமாக பிடித்திருக்கிறார்கள்
அனைவரும் யாரையோ அழைத்து
அவசர அவசரமாக தங்கள் முத்தங்களை
பரிமாறிக்கொள்கிறார்கள்

குழந்தைகளுக்கு சாக்லெட்களை
வாங்கி கொடுக்கிறார்கள்
நிறைய நீதிமான்கள் தங்கள் போதனைகளை
அச்சுக்கு அனுப்பி கொண்டிருக்கிறார்கள்

நீங்கள் கை தட்டுவதை
நிறுத்தி விடுவிர்கள் என்றால்
நிச்சயம் இங்கே யாரும் ஒரு
பிச்சைகாரனுக்காக
தங்கள் பிரசங்கத்தை
நிகழ்த்தி கொண்டிருக்க மாட்டார்கள்

thiyagarajan852@gmail.com

Series Navigationவேலூர் சத்துவாச்சாரி ஸ்ரீபுற்றுமகரிஷி சித்த மருத்துவ மையத்தின் இலக்கிய அணி சார்பில் திருமுருக கிருபானந்த வாரியார் நினைவு நாள் கூட்டம்.(வளவ. துரையனின் வார்த்தைச் சாட்டைகள் என்ற சிறுகதையை முன்வைத்து) ஒரு கதை; மனதின் எட்டுத் திசைகள்