உனக்காக ஒரு முறை

பிரபஞ்சத்தில்
எவருமில்லை
உன்னையும்
என்னையும்
தவிர

உன்
காலடித்தடங்கள்
பூமியில் பதிவதே இல்லையே
ஏன்?

உன்னை
சுற்றியதற்கு
கோயில் பிரகாரத்தை
சுற்றி இருந்தால் கூட
வரம் கிடைத்திருக்கும்

பண்பலையில்
ஒலிபரப்பாகும்
சோக கீதங்கள்
உன் கல் நெஞ்சைக்
கரைக்காதா?

மருத்துவர்
ஸ்டெதஸ்கோப்பை
நெஞ்சில் வைத்தார்
இதயம் லப்டப் என்று
துடிக்காமல்
உனது பெயரைச் சொல்லி
துடித்தது

மதுக்கிண்ணங்கள் தான்
போதை தரும் என
எண்ணியிருந்தேன்
உன் இரு கண்களைக்
காண்பதற்கு முன்

நீ திரும்பிப் பார்த்தால்
எரிமலை கூட
பனிமலையாய் மாறும்

நீ தொட்டவுடன்
வீணையிலிருந்து
புது நாதம் எழுந்தது

விரும்பியே
விழுகிறேன்
காதலில் மட்டும்

உன்னை
ஏற்றிக் கொண்டு சென்றால்
நம் காதல் படகு
ஆற்றில் கவிழாது

கண்ணாமூச்சி ஆட்டத்தில்
கண்கள் கட்டப்பட்டிருந்தாலும்
என் இதயத்தை திருடியவளை
என்னால் கண்டுபிடிக்க முடியாதா?

தேவதைகளுக்கு
பொறாமை
இறக்கையின்றி
காதல் வானில்
நாம் பறப்பதைக் கண்டு

காதலன்
என்ற ஸ்தானத்திலிருந்து
கணவனாக எப்போது
பதவி உயர்வு
தரப்போகிறாய்

பலுானில்
இருவரின் மூச்சுக்காற்று
பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்
காற்றில் கலப்பதற்கு முன்
உன்னிடம் காண்பிக்க

Series Navigationநடுங்கும் என் கரங்கள்…இந்திரா