உன்னாலான உலகம்


அருணா சுப்ரமணியன் 
நீயே உலகமென்று களித்திருந்தேன் 
உன்னால்  ஓர் உலகம் கிடைத்த 

உன்மத்தத்தில் ….
இவ்வுலகமே எனதானப் பொழுதிலும் 
உன்னையே என் 
உலகமென்று கொண்டிருந்தேன்..

உலகத்தின் உதாசீனங்களை எல்லாம் 
உதறியெழ முடிந்த நீ 

ஏனோ என்னை 
உதாசீனமாய் உதறிட விழைந்தாய்?

 உதாசீனங்களை உதறிட முடிந்த

எனக்கு உன் 
உதறலை உதாசீனப்படுத்த 
தெரியவில்லை…

ஆகட்டும்,
உதாசீனங்களை உதறிடக்  கற்றவாறே 
உதறல்களை உதாசீனப்படுத்தவும் 
உருமாற்றிக்கொள்கிறேன் 
உன்னாலான உலகத்தில்…

-அருணா சுப்ரமணியன் 

Series Navigationபெற்றோர்கள் செய்ய வேண்டியதுபுலம்பெயர் ஈழத்து படைப்பாளர்களின் விபரத்திரட்டு