உறவின் திரிபு !

 

ஒருவர் முகத்தை

ஒருவர் பார்க்க முடியாதபடி

கெட்டி தட்டிப்போய்

மலையாய் நிற்கிறது வெறுப்பு

 

முதுகின் பின்னால்

நீ பேசிய எல்லா சொற்களும்

முள் கிரீடம் அணிந்த வண்ணம்

என் முன் வந்து

கோரமாய்ச் சிரிக்கின்றன

 

தீயின் முன் நின்றுகொண்டு

உன்னால்

இனிப்பு உண்ண முடிகிறது

 

என் திசை வரும்

காற்று முழுவதையும்

வெப்பமேற்றி அனுப்புகிறாய்

 

தீயைப் பங்கு வைக்கும்

முயற்சியில்

எனக்கு மட்டும் அதிக அளவு

கிடைத்தது எப்படி ?

 

அன்பின் எல்லா அணுக்களும்

நிறம் மாறி நிற்கின்றன

 

Series Navigationவேண்டாம் அந்த முரட்டுப் பெண்! 20 (முற்றும் )குறிவைக்கப்படும் தலித் செயல்பாட்டாளர்கள்..