ஊரடங்கு வறுமை

Spread the love

 

ரோகிணி

கடந்தகால மகிழ்ச்சிகள்

கரையோர  மண்துகள்களாய்
நினைவலைகளில்  
கரைந்து  போக.. 
 
ஏதுமற்ற எதிர்காலமோ
எதிரே நின்று, என்னைப்பார்த்து
எகத்தாளமாய் சிரிக்க
 
அஞ்சுக்கும் பத்துக்கும்
அல்லாடுகின்ற, 
வயிற்றுக்கும் வாய்க்கும்
பற்றாக்குறையாகிவிட்ட
நிகழ்காலமே இப்போது
எனக்கு சாத்தியமென்று
என் கண்ணில் வழியும்
கங்கை  சொல்கிறது… 
 
ஒப்புக்கொள்ளதான்
வேண்டும் ஊரடங்கு
என்பதால்…. 
 
 
___________
 
Series Navigationதூக்கத்தில் அழுகைவட்டி