எனக்குப் பிடிக்காத கவிதை

Spread the love

சேயோன் யாழ்வேந்தன்

எனக்குக் கவிதை பிடிக்காது
பிடிக்காத கவிதை படித்து
பிடிக்காத கவிதை எழுதி
கவிதை எனக்குப் பிடித்துவிட்டது

பிடித்த கவிதை
படிப்பதும் இல்லை
எழுதுவதும் இல்லை

இரவைப் பற்றிய ஒரு கவிதையை
அசைபோட்டுக்கொண்டிருக்கிறேன்
இரவு முடிகையில் இந்தக் கவிதை
நினைவில் இருக்கும் என்ற குருட்டு நம்பிக்கையில்.

Series Navigationதொடுவானம் 114. தேர்வுகள் முடிந்தன .