எனது இதயத்தின் எவ்விடத்தில் நீ ஒளிந்திருந்தாய்?

 

நீ எடுத்துச் சென்ற உன்னுடையவற்றிலிருந்து

தவறுதலாக விடுபட்ட ஏதோவொன்று என்னிடத்தில்

 

தென்படாத வர்ணக் கறையைப் போல

மிகப் பெரிதாகவும்

கருங்கல்லைப் போலப் பாரமானதாகவும்

இதயத்துக்குள் ஆழ ஊடுருவிய

நானறியாத ஏதோவொன்று என்னிடம்

 

இந்தளவு தனிமை

எங்கிருந்துதான் உதித்ததோ

எனக்குள்ளே மூழ்கிப் போன ஒன்று

எப்படி உனக்குரியதாயிற்றோ

 

எனது இதயத்தின் எவ்விடத்தில் நீ ஒளிந்திருந்தாய்

இந்தளவு துயர் தந்து போக?

 

– காஞ்சனா அமிலானி

தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,

இலங்கை

Series Navigationநாஞ்சில்நாடன் சிறுகதைகளில் அங்கதம்மலரினும் மெல்லியது!