எனது வலைத்தளம்

Spread the love
அன்புடையீர்,
எதிர்வரும் ஜூலைமாதத்துடன் எனது வலைத்தளம் தொடங்கி ஒரு வருடம் முடியப்போகிறது. இதுவரை ஏறக்குறைய 9000 நண்பர்கள் வலத்தளத்தை பார்வையிட்டதாக கணக்கு. உங்களுக்கு முதலில் எனது நன்றிகள். ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளிகளில் புதுப்பிப்பதென்ற வரையறைகளை ஏற்படுத்திக்கொண்டிருந்தாலும் தவறிய சந்தர்ப்பங்கள் அநேகம். இனி அவ்வாறு நிகழாது.  இதுவரை பதிவிட்ட இடுகைகளின் மொத்த எண்ணிக்கை 130. மாதத்திற்கு 11 இடுகைகள். உங்கள் ஆதரவினால் கிடைத்த உற்சாகம்.
புதிய இடுகைகள்
1. துப்பறியும் புனைவுகள்: Whodunit
வரலாறு குற்றபுனைவுகள் தமிழில் உண்டா? அதற்கான வரவேற்புகள் எப்படி உள்ளன. தமிழிலக்கியம் மேற்கத்திய படைப்புகளையும் படைப்பாளிகளையும் காலம் தாழ்ந்தே புரிந்துகொள்கின்றன என்பதென் குற்றச்சாட்டு? புரிந்தென்ன ஆகப்போகிறதென்கிற தமிழ் படைப்புலகம் அவர்களைப் பற்றி பேசவோ எழுதவோ மாட்டோம் எனக்கூறும் துணிச்சலைப்பெற்றிருக்கிறோமா?
2. நாளை போவேன்- சிறுகதை. ஏற்கனவே தமிழின் வெகுசன இதழ்கள், சிற்றிதழ்கள், இணைய தளங்கள் ஆகியவற்றில் பிரசுரமான எனது கதைகளில் எனக்குப்பிடித்தமானவற்றை, வாசித்திராத நண்பர்களுக்காக மறு பிரசுரம் செய்யத் தொடங்கியிருக்கிறேன்
3. துருக்கிப்பயண்த்தின் 7வது தொடர், திண்ணையில் வெளிவரும் தொடரின் மறு பிரசுரம். கடந்த மார்ச் மாதத்தில் ஒரு வாரம் துருக்கிநாட்டிற்குச்சென்று வந்ததைத் தொடராக திண்ணையில் எழுதுகிறேன். அதன் மறு பிரசுரம். துருக்கிநாட்டின் அனுபவங்கள் வரலாறு பூகோளம் ஆகியவற்றோடு இணைத்து சொல்லப்படுகிறது.
மீண்டும் நன்றிகள்
அன்புடன்
நா.கிருஷ்ணா

 

Series Navigationஅவனுடைய காதலிசமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 58