மரபு பற்றியும், மரபு நமக்குச் சுமையா அல்லது நாம் மரபுக்குச் சுமையா என்பதையும் பற்றி பல கேள்விகளை எழுப்பிச் செல்கிறது பாரவியின் நீள் கட்டுரை. “மரபு எது? மரபுக்கு பொருள் உண்டா? மரபு தளம் உண்டா? உண்டெனில் அது என்னவாக இருக்கிறது? ” தொடர்ந்து பல கேள்விகளை இதச் சுற்றியே பின்னுகிறார் பாரவி. “இங்கு இன்று நான் எதுவாக இருக்கிறேன். நீ என்னவாக உள்ளாய்? எதன் அர்த்தம்/ பொருள் இயங்கு தளங்களாக நாம் பயணப் படுகிறோம். தேடலின்றியே […]
இரா. குணசேகரன். நடவு வெளியீடு, 269 காமராஜ் நகர், ஆலடி ரோடு, விருத்தாசலம் – 606 001 நவீன இலக்கியம் தனிமனிதர்களை மையமாகக் கொண்டிருக்கும். இதற்கு எதிர்வினையாக பிறந்த புதுவகை இலக்கியம் சமூகத்தை மையமாகக் கொண்டிருக்கும். நவீன எழுத்தில் அழுத்தமான ஒரு திருப்பம் உண்டு. மனிதன் சுயம்பு ஆனவன் இல்லை.அவனுக்குப்பின்னால் நீளும் நிழல் உண்டு. கானல்காடு ஆறுமுகம் என்ற தனித்த ஆளுமையை மட்டும் கூறவில்லை, அந்த ஆளுமைக்கு பின்னால் நிழலான மனிதர்கள் மூலம் சமூகத்தைப் பற்றி விமர்சிக்கும் […]
Samaksritam kaRRukkoLvOm 58 சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 58 இந்த வாரம் यत्र – तत्र (yatra – tatra) அதாவது ’எங்கு – அங்கு’ என்ற உருமாற்றம் பெறாத சொற்களைப் பற்றிப் பார்ப்போம். ஒரு வாக்கியத்தில் यत्र என்ற சொல்லை உபயோகித்தால் அதே வாக்கியத்தில் तत्र என்ற சொல்லையும் உபயோகிக்கவேண்டும். यत्र इति शब्दः यत्र प्रयुज्यते तत्र तत्र इत्यस्य अपि प्रयोगः भवेत् एव।(yatra iti śabdaḥ yatra prayujyate tatra tatra […]
அன்புடையீர், எதிர்வரும் ஜூலைமாதத்துடன் எனது வலைத்தளம் தொடங்கி ஒரு வருடம் முடியப்போகிறது. இதுவரை ஏறக்குறைய 9000 நண்பர்கள் வலத்தளத்தை பார்வையிட்டதாக கணக்கு. உங்களுக்கு முதலில் எனது நன்றிகள். ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளிகளில் புதுப்பிப்பதென்ற வரையறைகளை ஏற்படுத்திக்கொண்டிருந்தாலும் தவறிய சந்தர்ப்பங்கள் அநேகம். இனி அவ்வாறு நிகழாது. இதுவரை பதிவிட்ட இடுகைகளின் மொத்த எண்ணிக்கை 130. மாதத்திற்கு 11 இடுகைகள். உங்கள் ஆதரவினால் கிடைத்த உற்சாகம். புதிய இடுகைகள் 1. துப்பறியும் புனைவுகள்: Whodunit வரலாறு குற்றபுனைவுகள் […]
கோமதி [*1950இல் எழுதப்பட்டது] நந்தகுமார் கல்லூரி மாணவன். பெற்றோருக்குக் கடைசி மகன். செல்லப்பிள்ளை. நல்ல வசதியுள்ள குடும்பம். தாயார் அவனுக்கும் மணமுடிக்க ஆசைப்பட்டாள். உறவுமுறையில் ஒரு செல்வந்தரின் மகள் இருந்தாள். அந்தப் பெண் இந்துமதியை மணம் செய்விக்க முயற்சி செய்தாள். நந்தகுமாரின் அக்கா, தங்கைகள் இந்துமதியின் அழகை வர்ணித்தார்கள். சுருண்ட கூந்தல், சிவந்த உதடு, மைதீட்டிய கண்கள், முத்துப்பற்கள், கோல்ட் ஃப்ரேம் கண்ணாடி என்று சொன்னார்கள். உடனே நந்த குமார் ”செயற்கை அழகு செய்துகொள்ளும் பணக்க்காரப் […]
கஜாலா ஜாவேத் அவர்களது கொலை தாவூத் கட்டக் ஜூன் 18 ஆம் தேதி பிரபலமான பஷ்தோ பாடகி கஜாலா ஜாவேத் சுட்டுக்கொல்லப்பட்டார். அமைதியான சட்டத்தை மதிக்கும் குடிமக்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டிய அரசாங்கம் சட்டத்தை மதிக்காத தீவிரவாதிகள், கடத்தல் கொள்ளையர்கள் முன்னால் கையாலாகாத அரசாங்கமாக இருக்கிறது என்பதைத்தான் இசையையும் கலைகளையும் விரும்பும் மக்களுக்கு இன்னொரு எச்சரிக்கையாக காட்டுகிறது. கஜாலாவின் வயது 24. பெஷாவரின் தாப்காரி கார்டன் பகுதியில் உள்ள அழகு நிலையத்திலிருந்து ஒரு கச்சேரிக்கு செல்லும் […]
1938 டிசம்பர் 27 வெகுதான்ய மார்கழி 12 செவ்வாய்க்கிழமை குளிரக் குளிர வாரணாசியில் பொழுது விடிந்து கொண்டிருந்தது. அடை அடையாக அப்பிய பனி மூட்டம் இப்போதைக்குக் கலைகிற உத்தேசம் இல்லை என்கிறது போல் ஸ்நானக் கட்டங்களை மூடி மறைத்தது. ஓடியும் தேங்கியும் ஒடுங்கியும் விரிந்தும் கடந்த கங்கா நதிப் பிரவாகத்தை அது கீழிறங்கித் தொட்டு, கவிந்த படிக்கே விடியும் பொழுது. பஞ்ச பஞ்ச உஷத் காலத்தில் பூவாடையும் பிணவாடையும் மக்கிய இலையும் சோற்றுப் […]
பொ.மனோ கோபி இணையத்தில் தான் படித்துக்கொண்டிருந்த கட்டுரை ஒன்றை என்னிடம் கணனித் திரையில் காண்பித்தான். அதில், “நாம் ‘நிதர்சனம்’ எனக்கருதுவது எமது பிரக்ஞை வியாபித்துள்ள பரிமாணம் சார்பானது. ஒவ்வொரு பரிமாணத்திலும் அது வெவ்வேறு தளங்களை எடுக்கின்றது. எமது முப்பரிமாணத்திற்குட்பட்ட பிரக்ஞையூடாக நாம் கருதும் ‘நிதர்சனம்’ வேற்றுப் பரிமாணங்களில் தன் பிரக்ஞையை வியாபித்திருக்கும் ஒரு மனிதனுக்கு போலியானதாவே தோற்றம்பெறும். அம்மனிதன் கருதும் நிசர்சனம் அவனது பிரக்ஞை வியாபித்திருக்கும் பரிமாணத்துடன் மாறுபடக்கூடியது. எனவே பிரக்ஞை வியாபித்திருக்கும் பரிமாணப்படிநிலைகள் […]
ரேவதி வர்மா இயல் வெளியீடு 34/ 98 நாட்டு 1 சுப்பராயன் தெரு, மயிலாப்பூர் சென்னை.4 இவ்வுலகையும், அதன் மனித மனங்களையும் சொற்களின் ஆழங்கள் பெயர்ச்சிகளும் சொற்களிலே பிரித்துப் பகுத்து வெளிப்படுகின்றன. சுதந்திரங்களும், ஆழங்களும் வெளிமுழுவது அர்த்தங்களைத் தேடியலைகின்றன. பாரவிக்கு தன் படைப்புகளின் வழியே நிகழும் அகம் சார்ந்த அல்லது சுயம் சார்ந்த இடப்பெயர்ச்சி தான் பிடித்த மானதாயிருக்கிறது. நீட்சி அவரது நாற்பதாண்டு கால இலக்கிய வாழ்வின் தொகுப்பு என்னும் அர்த்தங்களின் நீட்சியையும், தனிமையின் நெருக்கடிகளையும்,மௌனங்களின் ஆழங்களையும் […]
தெலுங்கில் :B. ரவிகுமார் தமிழாக்கம் : கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com இதோ பாருங்கள்! நீங்க இப்போது திடீரென்று எங்கள் வீட்டுக்குள் நுழைந்து, என்னை இந்த கோலத்தில் பார்த்தீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். கட்டிய ஆடையுடன் தலையில் குடத்தால் அப்படியே தண்ணீரை அபிஷேகம் செய்துக் கொண்டிருப்பதாக நினைப்பீர்கள். விஷயம் எதுவாக இருந்தால் என்ன? என்னைத் தவறாகப் புரிந்துக் கொண்டவர்களில் நீங்களும் ஒருத்தர் என்று கணக்கிட வேண்டியது தான். ஆனால் நான் ரொம்ப நேரமாய் வியர்வை ஆறாய் வழிய எதையோ […]