என்ன இது மாற்றமோ ..?

image

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி, 

தமிழ்நாடு

 

 

என்ன இது மாற்றமோ ?

நெஞ்சுக் குழி வேகுதே !

தொண்டைக் குழி நோகுதே !

கன்னங்களில் நீர் சொரிய

கண்கள் ரெண்டும் சாகுதே !

ஏன் தானோ…?

சுகமான பேச்சில்

சுகராகம் பாடி

இதமாக வருடிச் சென்றவனே

இதழோரம் இன்று

வெறுப்பமிலம் உமிழ்ந்து

அணு அணுவாகக் கொன்று

நீ செல்வது ஏன் ?

 

தொடாமல் அணைத்து,

தொட்டுவிடத் தவித்து,

கட்டில் சுகம் விடுத்து,

கண்டதையும் ரசித்து,

கருத்துகள் பகிர்ந்து,

எழுத்துகள் உதிர்ந்து,

இரவுகள் கடந்து,

விடியலும் தொடர்ந்து,

சுகித்திட்ட சுகங்களும்

போனது எங்கோ…?

 

தாயாகத் தாங்கி என்னை

தோளோடு சேர்த்தவன்;

சேயான பின்பு

என்னைக்

கிழித்தெறிந்த மாயம் என்ன ?

அன்பு வண்ணங்கள் தீட்டி

என்னை

வடிவமைத்து ரசித்தவன்,

வண்ணங்கள் கொட்டிச் சென்ற

வன்மத்தின் சேதி என்ன…?

 

விடைகொடு தலைவா !

உன் சந்தேகத் தீயனுக்கு

தடையிடு தலைவா !

பெண்கள் உன் போகப்

பொருளல்ல !

காதல் கொண்ட நெஞ்சுக்குள்

வேறு பிம்பம் தோன்றுமா…?

மோதல் கொண்ட பின்பு கூட

ஊடல் என்று ஏங்குமா…?

பெண்ணவள் என்றும்

தாயின்

வடிவத்தில் வந்த கடவுளினம் !

 

உயிர்களை ஆக்கிக் காக்கும் நேசம்.

இயல்பினில் அவளது

பிறவிப் பாசம்.

உயிரோடு உயிர் சேர்ந்து,

உயிர் படைக்க,

உருவான திங்கு காதல் வாசம் !

சந்தேகம் விட்டுவிடு………..

உணர்வே ! தழுவிக் கொள்

ஒன்றை ஒன்று !

Series Navigationதிண்ணையின் இலக்கியத் தடம் -5