எப்போதும் புத்தாண்டே! என்றும் புத்தாண்டே!

கண்ணே என் கண்மணி மனிதனே

வாழ்வை அனுசரி இயற்கையைக் கொண்டு!

குளிர்ந்து கொண்டே விடியும் பொழுதில்

வெப்பம் தேடுவது இயற்கையை மறுப்பதாகும்!

வெயில் மொண்டு வரும் பகலில்

நீ குளிர் பருக நினைப்பது இயற்கையை எதிர்ப்பதாகும்!

மூடிய அறையில் வாடிடும் உடல் கொண்டு

தளர்ந்திட நீ பிறக்கவில்லை

இருப்பதின் ரகசியம் , இருப்பதிலேயே சிறந்த சொல்லைக்

கண்டிடும் மனதுடன் வாழ்தலைக் கண்டிடல்!

இறந்தவர் சொல்படி இழந்திடும் கணங்களை –

துடித்திடும் நிகழ்வினில் பொருந்தித் தவிப்பதை தவிர்த்திடு !

மீனெனக் கடலில் துள்ளியும் எதற்கு உன் இருமல்கள்?

கடலென விரிந்தும் ஏன் உன் வளர்ச்சியில் குறுகல்கள்?

நிமிடங்களோ

வினாடிகளோ

வருடங்களோ

வயதுகளோ

உனது மூச்சு – உனது காலம் – உனது பருவம்

யாவுக்கும் மேலே

வீரனைப்போல் ஞானியைப்போல்

ரகசியமெனவும் பகிரங்க மெனவும்

வெட்டவெளியில் தன் ஒளி ரகசியத்தை , இயற்கை எழுதுது பார்!!

அதனை கவனி ! அதனுடன் அனுசரி!

உன் வாழ்வுடன் தன்னை பொருத்தச் சொல்லி – அது –

மேன்மையின் இறகுவெளி கேட்டுக் கிடப்பதைப் பார் ! கலந்துகொள்!

அதன்பிறகு எப்போதும் புத்தாண்டேதான் பார் !

Series Navigationகடைச்சொல்அட்டாவதானி