எறும்பின் சுவை

 

 

குமரி எஸ். நீலகண்டன்

 

முறுக்கான கணுக்களாலும்

மூர்க்கமான திடத்துடன்

நெடு நெடுவாய்

நிற்கிறது கரும்பு.

 

ஊதா வண்ணத்துள்

ஒடுங்கி இருக்கிறது

கோடி கோடி

எறும்புகளுக்கும்

அள்ளிக் கொடுக்க

அளவில்லா சர்க்கரை.

 

பூச்சில் தெரிவதில்லை

புதைந்திருக்கும்

இனிப்பு.

 

கரும்பு மரத்தடியில்

காட்டெறும்பு

குடிக்கிறது

ஓடிய ரயிலின்

சன்னலிலிருந்து

விழுந்த கார்பரேட்

பொட்டலத்தில்

ஒட்டிய குளிர் பானத்தின்

துளிகளை சுவை

சொட்ட சொட்ட.          

punarthan@gmail.com

Series Navigationகனடாவில் எழுச்சி பெறும் தமிழ் மரபுத் திங்கள்