எழுத்தாளர்கள் ஊர்வலம் (3 ஆம் பாகம்)

This entry is part 30 of 45 in the series 26 பிப்ரவரி 2012

 

சு.சமுத்திரம்
===========
எழுத்து நிறைய கடல் உண்டு.
ஒரு துடுப்பு தேடும்
துடிப்பு உண்டு.

பி.எஸ் ராமையா
================

ம‌ணிக்கொடியை
கொடி அசைத்து
ஓட்டியவர் இவ‌ரே.

சாவி
====

மாற்றிப்ப‌டியுங்க‌ள்.
அமெரிக்காவுக்கு “விசா”
இவ‌ர‌து “வாஷிங்க்ட‌னில் திரும‌ண‌ம்”

ம‌ணிய‌ன்
‍========

ஆன‌ந்த‌ விக‌ட‌னில்
அங்குல‌ம் அங்குல‌மாய்
ஊர்ந்த‌ எறும்பு.

ஸ்டெல்லா புரூஸ்
=================

காத‌லுக்கு க‌ண்ணில்லை என்பார்க‌ள்
நாவ‌ல்க‌ளில் காதலுக்கு
துடிப்புமிக்க‌ க‌ண்க‌ள் த‌ந்த‌வ‌ர்.

டாக்ட‌ர் ல‌ட்சுமி
==============
பெண்க‌ள் என்றாலே
குத்துவிள‌க்கு தான் என்று
பிர‌ம்மாண்ட‌ க‌ட் அவுட் வைத்த‌வ‌ர்.

அனுராதா ர‌ம‌ண‌ன்
================
இவரது அசோக‌ வ‌ன‌த்து
“சிறை” சீதைக்கு இல்லை.
ஆணாதிக்க‌ ராம‌னுக்கு.

ராஜ‌ம் கிருஷ்ண‌ன்
================

மெல்லிய‌ க‌ம்பிக‌ளாய்
ரீங்க‌ரிக்கும் எழுத்துக்க‌ள்.
புத்த‌க‌ம் முழுவ‌தும் வீணை.

கோமல் சுவாமிநாதன்
===================

“தண்ணீர் தண்ணீர்”
தம்ளர் ஞாபகத்துக்கு வரவில்லை.
இவர் நாடக‌ம் தான் விரிகிறது.

தென்க‌ச்சி சுவாமிநாத‌ன்
=====================

துக்க‌டா பேச்சுக‌ள்
ப‌க்க‌டாவாக‌ சுவைத்தாலும்
ஒப்ப‌ற்ற‌ ந‌கைச்சுவை வ‌டிவ‌ங்க‌ள்.

ராஜாஜி
======
பதினெட்டு நாளின் அந்த பங்காளி போர்
இவரது”வியாச‌ர் விருந்தில்
அற்புத‌மான‌தொரு “விஷுவ‌ல்”விருந்து.

வாலி
=====

சொற்க‌ளை ஒடித்து ஒட்டிய‌
இவ‌ர‌து “வ‌தைப்ப‌ட‌ல‌த்தில்”
த‌மிழின் “இன்ப‌ காண்ட‌ம்”.

மு.மேத்தா
==========

ஊர்வ‌ல‌மாக‌ விட்ட‌ எழுத்துக‌ள்
தெருவுக்கு விட்ட‌த‌ல்ல‌
த‌மிழ் “க‌விதையாய்” க‌ண்விழிக்க‌.

நா.காம‌ராச‌ன்
============

த‌மிழ் எழுத்துக்க‌ள் அத்த‌னையும்
இத்த‌னைத் தூரிகைக‌ளா என‌
விய‌க்க‌ வைத்த‌வ‌ர்.

எஸ்.ஏ.பி
=========

குமுத‌க் குடிம‌க‌ன்
கோப்பை அறிந்து
ர‌ச‌ம் ஊற்றிய‌வ‌ர்.

சேவ‌ற்கொடியோன்
=================

விக‌ட‌னின்
“செல்ல‌ப்பிள்ளை” ஆனாலும்
வெல்ல‌ப்பிள்ளை தான் எழுத்தில்.

சிவ‌ச‌ங்க‌ரி
=========

இவர் “நூல்க‌ண்டை”பிரித்தால்
க‌ற்க‌ண்டும் இருக்கும்..க‌ண்ணீரின்
ந‌ண்டுக‌ளும் இருக்கும்.

வாச‌ந்தி
=======

எழுத்துக்குள் எல்லாம்
ஏ.சி.யின் ரீங்கார‌ம் கேட்கும்
இத‌ய‌த்து அவலங்களின் இசையில்.

இந்தும‌தி
========

ம‌ன‌ எழுச்சிக்குள் பெண்ணின்
ம‌த்தாப்பும் உண்டு
“ம‌டிசாரும்”உண்டு.

பால‌குமார‌ன்
===========

சுஜாதாவை அசைபோட்டாலும்
மெர்குரி பூக்க‌ளிலிருந்து எழுத்துக்களின்
பூப்பு புனித‌ நீராட்டு தான்.

புஷ்பா த‌ங்க‌ துரை
==================

புஷ்பா எங்கேப்பா என்று கேட்காதீர்க‌ள்.
வேணுகோபால‌ முக‌ மூடியும் உண்டு.
க‌ண்சிமிட்டுவ‌தெல்லாம் ஊதாப்பூக்க‌ள்.

ர‌ம‌ணிச‌ந்திர‌ன்
=============
டி.வி.சீரிய‌ல்க‌ளின் க‌ண்ணீர்க்கொத்துக‌ள்
ஊறிவ‌ருவ‌த‌ற்கெல்லாம்
க‌ங்கோத்ரி இவ‌ரே.

கொத்த‌ம‌ங்க‌ல‌ம் சுப்பு
===================
“தில்லானா மோக‌னாம்பாள்” எழுத
உட்கார்ந்த‌ போதே பேனாவில்
“சிவாஜி க‌ணேச‌னை” ஊற்றிக்கொண்டுவிட்டார்.

==========================================================

Series Navigationஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 12சந்ததிகளும் ரப்பர் உறைகளும்
author

ருத்ரா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *