எஸ்.பொன்னுத்துரை (எஸ்.பொ) மற்றும் காவலூர் ராஜதுரை – மெல்பனில் நினைவரங்கு – விமர்சன அரங்கு

எஸ்.பொன்னுத்துரை   (எஸ்.பொ)  மற்றும் காவலூர்   ராஜதுரை – மெல்பனில்  நினைவரங்கு – விமர்சன  அரங்கு
This entry is part 13 of 23 in the series 14 டிசம்பர் 2014

மெல்பனில்  நினைவரங்குவிமர்சன  அரங்கு

அவுஸ்திரேலியாவில்  அண்மையில்  மறைந்த  ஈழத்தின்  மூத்த இலக்கியப்படைப்பாளிகள்  எஸ்.பொன்னுத்துரை   (எஸ்.பொமற்றும் காவலூர்   ராஜதுரை   ஆகியோரின்   நினைவாக  அவர்களின்  படைப்புலகம் குறித்த  மதிப்பீட்டு  அரங்கும்  எழுத்தாளர் முருகபூபதியின்   20  ஆவது   நூல்  சொல்லமறந்த  கதைகள்  தொகுதியின் விமர்சன    அரங்கும்    மெல்பனில்   எதிர்வரும்   20   ஆம் திகதி (20-12-2014) சனிக்கிழமை   மாலை   5   மணிக்கு,

   Darebin Intercultural Centre – Preston (59 A, Roseberry Avenue, Preston -3072)  இல்  நடைபெறும்.

கலை, இலக்கிய  ஆர்வலர்   சட்டத்தரணி   செ.ரவீந்திரன்  தலைமையில் நடைபெறவுள்ள    இந்நிகழ்வில்,  மறைந்த  மூத்த  எழுத்தாளர்  எஸ்.பொ. வின்  ஆக்க  இலக்கியப்படைப்புகள்  (சிறுகதைநாவல்தொடர்பான மதிப்பீட்டுரையும்  அவர்  அவுஸ்திரேலியாவில்  வெளியான  திங்கள் இதழ்களான  மரபு  – அக்கினிக்குஞ்சு   ஆகியவற்றில்    வழங்கிய  பங்களிப்பு தொடர்பான  உரைகளும்  இடம்பெறும்.

மூத்த  எழுத்தாளர்  காவலூர்  ராஜதுரையின்  படைப்புலகம்இலங்கை வானொலி   மற்றும்  திரைப்படம்குறும்படத்துறையில்  அவரது  பங்களிப்பு தொடர்பாகவும்    உரைகள்   நிகழ்த்தப்படும்.

நினைவரங்கைத்தொடர்ந்து    எழுத்தாளர்    முருகபூபதியின்     சொல்லமறந்த கதைகள்   நூல்  விமர்சன உரைகள்  இடம்பெறும்.

மேலதிக  விபரங்களுக்கு: முருகபூபதி

letchumananm@gmail.com     – தொலைபேசி:  04 166 25 766

 —-0—

Late.Kavaloor Rajathurai

WriterS.Ponnuthurai

Murugapoopathy Book Cover

Series Navigationஆனந்த பவன் நாடகம் வையவன்   காட்சி-17Goodbye to Violence – A transcreation of Jyothirllata Girija novel Manikkodi – Published

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *