ஐசிஐசிஐ வங்கியின் மென்பொருள் பாதுகாப்பானதா…?

Spread the love

இந்திய வங்கிகளின் ஆன் லைன் வசதியில் ஐசிஐசியை நவீனமாகவும் அதன் பயனீட்டாளர் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு உபயோகிப்பதற்கு இலகுவாகவும் அதன் இணையமூல சேவையில் முன் நிற்கிறது.

ஆனால், அதில் சில முறை தவறான தகவல்கள் வருகின்றன,,, அது பற்றி எழுதினாலும் பதில் வருவதில்லை… மென்பொருளின் கவனிக்கப்படாத, சீராக எழுதப்படாத உத்திரவுகள் பல குழப்பங்களையும் இழப்புகளையும் ஏற்படுத்தவே செய்யும்.
உலகமே திரண்டு ஒப்பாரி வைத்த Y2K விஷயம் பற்றி சற்றும் அக்கறையின்றி தவறான அதுவும் மிக மிகத் தவறான தகவல் மற்றும் விடைகளை ஐசிஐசிஐ இணைய தள சேவையில் வருகிறது…
2010, 2011 என்ற வருடங்களே ஐசிஐசியைக்கு கிடையாது போலிருக்கிறாது… அவை முறையே 1910 , 1911 என்றே வருகிறது.
இது மிகப் பெரிய விபரீதம் என்பது கூடத்தெரியாமல் ஐசிஐசியை நிர்வாகிகள் அலட்சியப்படுத்துதல் அவர்களின் சேவையின் ஈடுபாட்டையும் கம்பெனி மீதான மரியாதையையும் தான் காட்டுகிறது…
இதோ, ஒரு ஸ்கிரீன் ஷாட்…

பி.கு: செபியின் வற்புறத்தலுக்கு பின்பும், ஐசிஐசிஐ இணைய தளத்தில் சேர்மன் மற்றும் இயக்குனர்கள் மின்னஞ்சல் முகவரி கிடையாது.

Series Navigationஐங்குறுப் பாக்கள்ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்)அங்கம் -3 பாகம் – 11