ஒரு உண்ணாவிரத மேடையில்

Spread the love

குமரி எஸ். நீலகண்டன்

மரண தண்டனையை
எதிர்த்தும் மனித
உரிமைகளுக்காகவும்
உண்ணாவிரதமிருந்தான்
அவன்.

எந்த உயிரைக்
கொல்வதற்கும்
மனிதனுக்கு உரிமை
இல்லையென்றே
முழங்கினான்.

அவனைக் கடித்துக்
கொண்டே இருந்த
கொசுக்களை
அடித்து அடித்து
இதையெல்லாம்
சொல்ல வேண்டி
இருக்கிறது அவனுக்கு.

குமரி எஸ். நீலகண்டன்

Series Navigationதிருமதி கமலாதேவி அரவிந்தனின் “நுவல்” நூல் – விமர்சனம்ஆப்பிள் பெருநகரில் – 1 – கால் சராய் அணியாத பயணிகள்