ஒற்றன்

கு. அழகர்சாமி

திறக்கத்

திறக்க

தாள் திறக்கும்

என் கண் வளர்க்கும் கனவுகளில்

ஒரு கனவாய் நுழைந்து

காணாமல் போகிறாய்

நீ.

ஒளிக்காது

ஒரு முகத்தின்

ஆயிரம் முகங்கள் காட்டும்

என் அகக் கண்ணாடியில்

ஒரு முகமும் காட்டாது

ஏமாற்றி

மறைந்து போகிறாய்

நீ.

என்

குரலின்

எத்தனையோ கிளைகளில்

ஒலிக்கும்

கூற்றுப் பறவைகளில்

ஒலிக்காத

ஒரு கூற்றாய்ப் பறந்து போகிறாய்

நீ.

என்னுள்

என்னைப் போல்

ஒளிந்திருக்கும்

ஒற்றன் நீ

யார்?

கு. அழகர்சாமி

Series Navigationஇருள் கடந்த வெளிச்சங்கள்தமிழகத்தில் தற்போது இயங்கிவரும் இருபெரும் கடல் உப்பு நீக்கி குடிநீர் உற்பத்தி நிலையங்கள்