ஒற்றைப் பனைமரம்

உள்ளே போவதற்குப்

பல வழிகள் இருக்கின்றன.

எல்லாக் கதவுகளும்

திறந்துகொண்டு வருபவரை

விழுங்கிவிடக் காத்திருக்கின்றன

சிலர் ஏதேனும் ஒருவழி

அறிந்து உட்புகுகிறார்கள்

அவர்கள் நுழைந்தவுடன்

கதவுகள் தாமாக மூடிக்கொள்கின்றன

தட்டினாலும் திட்டினாலும்

திறக்காதவை அவை

அதன் உரிமையாளன்

ஆசைக்கயிறு வீசி

அலைக்கழிக்கிறான்

அதன் காவல்காரனின்

கண்களில் உங்களின் வரவு

ஆசைக்கங்குகளை ஏற்றுகிறது

எருமையும் கூகையும்

எங்கும் அலைய நீங்களோ

ஒற்றைப் பனைமரம்

நிலைக்குமென நம்புகிறீர்கள்

Series Navigationகூகைஇயற்கையுடன் வாழ்வு