ஒற்றையடிப் பாதை

Spread the love

 

 

 

முந்தி வசப்படுத்த

வழியில்லை என்றால்

வாய்ப்பு என்றதற்குப்

பெயரில்லை

 

நாற்காலியின் கால்களாய்

உறவு முறைகள்

உள்ளார்ந்து அதிகாரம்

சுமக்கும் பெயர்களில்

 

வாய்புக்கள் பரிமாறா

உறவினன் ஆயிரம்

பாதங்கள் பட்டதால்

ஒற்றையடிப் பாதையில்

முளைக்காது ஒதுங்கிய

செடி

 

தற்செயலாய் அமைவதில்லை

தடங்கள்

வாய்ப்புக்களின் மறுபக்கமாய்ட

அல்லது வழித் தடமாய்

 

வெகுஜனமில்லாத் தடம் நேரம் உருவம்

பாத ஒலிகள்

எதிரொலிக்கும் குரைச்சல்கள்

Series Navigationமிருதன் – மனிதர்களை மிருகங்களாக்கும் வைரஸ். தமிழில் ஒரு வித்தியாசமான ஹாரர் படம்.நேர்ப்பக்கம் – அழகியசிங்கரின் கட்டுரைத்தொகுதி