Posted in

ஓர் பிறப்பும் இறப்பும் ….

This entry is part 5 of 42 in the series 1 ஜனவரி 2012


 

எங்காகிலும் தட்டுபடுகிறதோ

அந்த சாம்பல் வண்ண வண்ணாத்திப்பூச்சி ?

நீள் கோடுகளும் அங்காங்கே

புள்ளிகளுமாய்..

அழகின் ஒரு பகுதியை

குத்தகைக்கு எடுத்த பிம்பமென

தாவி தாவிப் பறக்கும் அது …?

 

மனம் கவர்ந்திழுத்த அதன்

நினைவுகளில்

அழுகிப்போன இதயங்களின்

சுவடுகள் ஏதும் பதிப்பிக்க

அவைகள் இறகுகள் உதிர்ப்பதாய்      இல்லை …

 

மெல்லிய இறக்கைகள் விரித்து

பறக்கும் அவைகளில்

கனந்து போன துன்பங்கள்

கரைந்து போக …

மழையின் சாரல்கள் மிஞ்சியவற்றையும்

கரைக்க ….ஏதோ ஓர் பிறப்பின்

ஆரம்பமும் …முடிவும் …

ஒருங்கே பிரசவித்தது ….
ஷம்மி முத்துவேல்

Series Navigation‘‘காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்’’கல்வி குறித்த கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்கம்

One thought on “ஓர் பிறப்பும் இறப்பும் ….

  1. மனம் கவர்ந்திழுத்த அதன்

    நினைவுகளில்

    அழுகிப்போன இதயங்களின்

    சுவடுகள் ஏதும் பதிப்பிக்க

    அவைகள் இறகுகள் உதிர்ப்பதாய் இல்லை …

    அருமை .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *