author

வாத்சல்யம் அற்ற கிரகணங்கள் …

This entry is part 6 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

இரவின் நிழல்கள் கோலமிடுகின்றன அவைகளின்,  விரல் பிடித்தே வெளிச்சங்கள் கதிர்களின் கிரகணங்கள் படர மீண்டு வரா தொலைவில் புதைந்தன கனவுகளின் வாத்சல்யம் நிழலின் படங்கள் ஒருபோதும் கலைவதோ அல்ல கலைக்க படுவதோ  இல்லை … எங்காகிலும் ஒளிந்து ஒவ்வொரு நிகழ்விலும் தலைப்படும் அவை … தர்கிக்கும்  .. உருகி நிற்கும் தருணங்கள் உறையும் நிகழ்வுகள் இவைகள்  கிரகண பொழுதில் ஒளிகள் அற்று இன்னும் சுற்றி  சூர்யனை தகர்க்கும் … துகள்கள் சிதறி வளியின் அடர்வு அதிகப்படும் புரியாத […]

யாதுமாகி …

This entry is part 19 of 33 in the series 27 மே 2012

நாற்புறச்சட்டகத்தின்  பின்  இருப்பது தெரியாமல் பேசிக்கொள்கிறார்கள் .. நிறமிகளின் பின்னே நரை  மறைத்து  நிரந்தரமாகவே அவை சென்று விட்டதாகவே நினைத்து கொள்கிறார்கள் … கண்ணோரச் சுருக்கங்களையும் மோவாயின் தளர்ந்த தசைகளையும் நீவி இழந்தவைகளை ஷன நொடிகளில் பிடித்து விட்டதாக கற்பனை நிஜங்களில் சஞ்சாரம் செய்கிறார்கள் குழந்தையிடமும் சிரியவர்களிடமும் மட்டுமே தம் கோபங்கள் மற்றும் மூர்க்கங்கள் விதைத்து இயலாமையை கோபச்ச்சுமைதாங்கியில் சமைத்து பரிமாறுகிறார்கள் .. தோல்விகளை திரையிட்டு மறைத்து வெற்றிவேஷங்களை மட்டுமே வெளியிடுவர் .. புழக்கடை தனதாயின் அதிலும் […]

………..மீண்டும் …………..

This entry is part 22 of 40 in the series 8 ஜனவரி 2012

எண்ணற்ற நட்சத்திரக் கோள்களில் தேடி த் தேடி களைத்துபோய் இருக்கையில் எங்கோ ஒரு மூலையின் ஓரமாய் கண்சிமிட்டி அழைக்கிறாய் இறகுகளின் சுமைகளை அப்போது தான் உதிர்த்து பரவலாய் வைத்திருந்தேன் … அவைகளை எடுத்து பிணைத்து கொண்டு இருக்கையில் … சப்தப்படாமல் விடிந்து விடுகின்றது ஒரு காலைப்பொழுது …. இரவிற்கான காத்திருத்தல் தொடங்குகிறது ….. ஷம்மி முத்துவேல்

ஓர் பிறப்பும் இறப்பும் ….

This entry is part 5 of 42 in the series 1 ஜனவரி 2012

  எங்காகிலும் தட்டுபடுகிறதோ அந்த சாம்பல் வண்ண வண்ணாத்திப்பூச்சி ? நீள் கோடுகளும் அங்காங்கே புள்ளிகளுமாய்.. அழகின் ஒரு பகுதியை குத்தகைக்கு எடுத்த பிம்பமென தாவி தாவிப் பறக்கும் அது …?   மனம் கவர்ந்திழுத்த அதன் நினைவுகளில் அழுகிப்போன இதயங்களின் சுவடுகள் ஏதும் பதிப்பிக்க அவைகள் இறகுகள் உதிர்ப்பதாய்      இல்லை …   மெல்லிய இறக்கைகள் விரித்து பறக்கும் அவைகளில் கனந்து போன துன்பங்கள் கரைந்து போக … மழையின் சாரல்கள் மிஞ்சியவற்றையும் கரைக்க […]

முடியாத் தொலைவு

This entry is part 7 of 53 in the series 6 நவம்பர் 2011

கசக்கி எறிந்த காகித வார்த்தைகள் உறைந்து மடிகின்றன … காத்திருக்கின்றது இன்னும் எச்சமாகி நிற்கும் விகுதிகள் எதிலும் பூரணத்துவம் பெற்றிருந்த அவ்வார்த்தைகள் ஒரு சில நேரங்களில் முரண்படுகின்றன அவ்வேளைகளில் வீரியம் அதிகமாக … வெளிவரும் ஒவ்வொன்றிலும் தொக்கி நிற்கும் ஒரு துளி விஷம் …. விடுதலற்ற கணக்காகி எங்கிலும் எச்சமென தொடரும் அவை .. என்றும் முடியாத் தொலைவு வரை …. ஷம்மி முத்துவேல்

சிற்சில

This entry is part 33 of 45 in the series 9 அக்டோபர் 2011

சிற்சில சொல்லாடல்கள் பிரித்து அறியப்படாமலே  வாதங்கள் என மேல்போர்வை கொண்டு ஆழங்களில் சிக்கித்தவிக்கின்றன .. மீட்சி என்னும் சொல்லறியா அவை தனக்குள் முடங்கி  “தான் ” விடுத்து.. தர்க்கத்தில் கலந்து பிணைந்து  பின்னர் தானாய் கரைந்தும் விடுகின்றன அவைகளுள் சிலவோ நீரினடியில் வேர் பிடித்து தண்டின் வழி உண்டு எங்காவது  மலர சேற்றின் அடியில் இன்னும் சிக்கி மூச்சடக்கி கிடக்கின்றன அந்த பள்ளங்களில் நீர் வற்றும் வரை … ஷம்மி முத்துவேல்

அவன் …அவள் ..அது ..

This entry is part 33 of 54 in the series 4 செப்டம்பர் 2011

அவன் ஏதோ ஓர் அடர்வண்ணம் நிரப்பியே அவன் எழுதுகிறான் பலசமயம் அவை புரிவதாயில்லை .. எழுத்துக்கள் ஒன்றோடு ஒன்று முரண்பட்டும் , ஒட்டிக்கொண்டும் கையெழுத்து வேண்டாம் என மசிநிறைத்த தட்டச்சு இயந்தரத்தில் பிரதி எடுக்கிறான் அப்போதும் அவன் வார்த்தைகள் ஒன்றோடு ஒன்றாய் அப்பிக்கொள்கின்றன அவள் .. எழுதிய வார்த்தைகளினூடே கூறா மொழிகளையும் சேர்த்தே படிக்கிறாள் .. விழிகளின் மொழிகளை இளவர்ணங்களில் தோய்த்தெடுத்து அறைகளின் சுவர்களில் பூசி வைக்கிறாள் ஒட்டிக்கொண்ட வார்த்தைகள் அழகாய் தனித்து தெரிந்தன அடர் நிறமாய் […]

எங்கிலும் அவன் …

This entry is part 10 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

எங்கிலும் அவன் ஒளிந்தே இருக்கிறான் காலை பொழுதின் கதிரினூடே கிளம்பி மாலை மயங்கியும் கூட அவனின் உறக்கங்கள் துவக்கபடவேயில்லை அடர் வனங்களின் தருவின் இடுக்குகளில் வீழ்ந்து கிடந்த இலையொன்று கதைத்து கரைத்தது அவனின் எண்ணற்ற வெற்றி பொழுதுகளை சுழன்றடித்த பெருங்காற்று கிளப்பியது எரிந்து போன சாம்பல் நினைவுகளை பெருந்தீவின் பாரமென ஒளிந்து நின்ற பெருங்கனவின் சார்பை ஒத்தே இருந்தன அந்த இலையின் ஒரு புறம் .. மறு புறமோ  எங்கோ வழக்கொழிந்த அவன் ஒட்டிக்கொண்டு இருக்கிறான்.. மரணமென […]

எங்கோ தொலைந்த அவள் . ..

This entry is part 17 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

யன்னல்கள் ஏதுமற்றிருந்த அந்த ஒற்றையறையின் கதவுகள் சாத்தப்பட்டே இருந்தன எப்போதும் அலறல்களும் கூச்சல்களும் அங்கே கசிய விடப்பட்டிருக்கும் ஒலித்துகள்கள் ஒவ்வொரு அணுவிலும் ஏற்றப்பட்ட உடல் அதிரத்துவங்கும் மௌனமான நேரங்களில் கூட செவிகளில் ரீங்காரமிடும் அந்த அழுகையின் ஒலி அவளிலிருந்து அந்த அறைக்கு விடுதலை தந்தது ஒர் மரணம் மீண்டும் பூட்டப்பட்ட அந்த அறைக்குள் அவள் தனித்து கூச்சல்களும் அலறல்களும் அழுகைகளும் மீண்டு வரமுடியாத் தொலைவொன்றில் .. ஷம்மி முத்துவேல்

கனா தேசத்துக்காரி

This entry is part 3 of 47 in the series 31 ஜூலை 2011

கனவுகளில் தன்னைத்  தொலைத்தபடியவள் என்றுமே தனித்திருந்தாள் அம் மாய உலகில் தனக்கெனவோர் அரியாசனம் அமைத்தவள் பிரஜைகளையும் உருவாக்கினாள் அவளின் பதிவுகளைத் தாங்கியே இருந்தனர் அதில் அனைவரும் பதிப்பிக்கப்படாமல்  இருந்தன பொய்களில் சாயல்கள் அங்கிருந்த நிழல்களெல்லாம் கருமையின் பிம்பங்கள் வெளிர் நிறங்கள் தாங்கிய போர்க்கொடியும் ஏற்றப்படுவதேயில்லை மனதின் நீரூற்றுகள்  பல வண்ணங்களில் வாரி இறைத்தபடியிருந்தன தனக்கென ஓர் குணத்தைக் கொண்டுமிருந்தன ஒவ்வொரு நிறமும் கோரமாய்  குணம் கொண்ட வல்லூறொன்றின்  பார்வையில் சிக்கின அவள் கனவுகள் இறுதியில் நனைந்த கோழிக் […]